கம்பராமாயணம் 6402 · யுத்த 3.172

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
-
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'ஏனவர்க்கு வேண்டின், எளிது ஒன்றோ? எற்கு அன்பர்
ஆனவர்கள் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார்;
தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ?
வானவர்க்கும் நீயே இறை - தொல்மறை வல்லோய்!

பொருள் · Meaning in Tamil

தொல் மறை வல்லோய்- பழமையான வேதங்களை எல்லாம் ஓதாதுணர்ந்த வித்தகனே, எற்கு அன்பர் ஆன வர்க்கம் எல்லாம்- எனக்கு அடியவர்களாக இருக்கும் அன்பர் கூட்ட மெல்லாம்; நினக்கு அன்பர் ஆயினார்- உன்னிடம் அன்பு கொண்ட உனது தொண்டர்கள் ஆவார்; தானவர்க்கு வேந்தன் நீ - நீ அசுரர் இனத்துக்கு அரசன்; என்னும் தரத்தாயோ - என்ற தரம் மட்டும் உடையவனோ?; (அல்ல) வானவர்க்கும் நீயே இறை - தேவர்களுக்கும் நீயே தெய்வம்; ஏனவர்க்கு வேண்டின் - உன்னையல்லாது மற்றெவரும் பெற விரும்பினால்; எளிது ஒன்றோ - நீயடைந்த பெருவாழ்வை அடைவதென்பது அத்தனை எளியதொன்றோ?

வேறு எவரிடமும் கற்காது இறைவனால் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவன் பிரகலாதன். வர்க்கம் - குழு (கூட்டம்). தரம் - தகுதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Should others desire it, would it come easily? All the host
  2. who are my devotees have become your devotees;
  3. are you of no higher rank than king of the Tāṉavars?
  4. You are lord even of the gods, O master of the ancient Veda!"

What the poem says

God raises Pirakalātaṉ above all others. Everyone devoted to God is now devoted to him as well. He is more than a king of the demons; he is a lord even to the gods. He mastered the Vedas without study, by God's grace alone.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'ēṉavarkku vēṇṭiṉ, eḷitu oṉṟō? eṟku aṉpar
āṉa varkkam ellām niṉakku aṉpar āyiṉār;
tāṉavarkku vēntaṉ nī eṉṉum tarattāyō?
vāṉavarkkum nīyē iṟai - tol maṟai vallōy!