கம்பராமாயணம் 6403 · யுத்த 3.173

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'நல் அறமும், மெய்ம்மையும், நான்மறையும், நல் அருளும்,
எல்லை இலா ஞானமும், ஈறு இலா எப்பொருளும்,
தொல்லை சால் எண்குணனும், நின் சொல் தொழில் செய்க;
நல்ல உரு ஒளியாய், நாளும் வளர்க நீ.

பொருள் · Meaning in Tamil

மல்லல் உரு ஒளியாய் - வளம் மிக்க அழகிய ஒளிபடைத்த மேனியை உடையவனே; நல் அறமும் மெய்ம்மையும் - என்றும் நன்மை தரும் அறமும் வாய்மையும்; நான்மறையும், நல்அருளும் - நான்கு வேதங்களும், நலம் பயக்கும் திருவருளும்; எல்லைஇலா ஞானமும் - அளவில்லாத மெய்யுணர்வாகிய நல்ல ஞானமும்; ஈறு இலா எப்பொருளும் - அழிவில்லாத எவ்விதமான பொருள்களும்; தொல்லைசால் எண் குணனும் - பழமை வாய்ந்த எட்டுக் குணங்களும்; நின்சொல் தொழில் செய்ய - (ஆகிய இவையெல்லாம்) உனது சொல்கேட்டுத் தொழில் செய்ய; நாளும் வளர்க நீ- நாளும் நாளும் நீ வளர்ந்து விளங்குவாயாக.

"வளர்க நீ" என்பது அடுத்த பாட்டில் வரும் "என்று வரம் அருளி" என்பதனோடு இயைந்து பொருள்படும். மெய்ம்மை - வாய்மை. மெய்யுணர்வாகிய ஞானம் வரம்பற்றது என்பதால் 'எல்லை இலா ஞானம்' என்றார். எண் குணங்கள்; தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவுஇல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பனவாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Let righteousness and truth, the four Vedas and gracious kindness,
  2. boundless wisdom, all imperishable things,
  3. and the eight ancient qualities carry out your word;
  4. O you of rich and radiant form, may you flourish every day."

What the poem says

The Lord blesses Pirakalātaṉ: righteousness, truth, the Vedas, grace, wisdom and the eight divine qualities will all serve him. The sentence runs on into the next verse. The commentary lists the eight qualities: self-mastery, a pure body, natural understanding, all-knowing, natural freedom from bonds, great grace, endless power and boundless bliss.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'nal aṟamum, meymmaiyum, nāṉmaṟaiyum, nal aruḷum,
ellai ilā ñāṉamum, īṟu ilā ep poruḷum,
tollai cāl eṇ kuṇaṉum, niṉ col toḻil ceyya;
mallal uru oḷiyāy, nāḷum vaḷarka nī.