கம்பராமாயணம் 6414 · யுத்த 4.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அஞ்சினை ஆதலின்- அந்த மானிடருக்கு நீபயந்துவிட்டாய் ஆதலால்; அமர்க்கும் ஆள் அலை- அவருடன் போரிடுவதற்கும் ஏற்ற ஆளல்ல; தஞ்சு என - அடைக்கலம் என்று; மனிதர் பால் வைத்த சார்பினை - மனிதர்களிடம் கொண்ட பற்று உடையவனாய் விட்டாய்; வஞ்சனை மனத்தினை- வஞ்சகமுடைய மனத்தை உடையவனாயுள்ளாய், பிறப்பு மாற்றினை - நமது அரக்கப் பிறப்புக் குரிய பண்பிலிருந்து மாறிவிட்டாய்; நஞ்சினை உடன் கொடு - கொடியவிடத்தை உடன் வைத்துக் கொண்டு; வாழ்தல் நன்மையோ - வாழ்வதால் நன்மை உண்டாகுமோ?
பகைவரைப் பற்றி அஞ்சாதவர்களே அமருக்கு உரியவர்கள் என்பதால் 'அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அல்லை' என்றான். தஞ்சு- புகலிடம். அரக்கர்க்குரிய இயல்புகள் எதுவும் இல்லாத நீ உனது பிறப்பையே மாற்றிக் கொண்டாய் என்பான் "பிறப்பு மாற்றினை" என்றான். "நீதியால் வந்த தொரு நெடுந்தரும நெறியல்லால் சாதியால் வந்த சிறு நெறி அறியான்" என வீடணனைப் பற்றி கும்பகருணன் இராமபிரானிடம் கூறுவதாக வருவது (7625) நினைவு கூரத்தக்கது. நஞ்சை உடன் கொண்டு வாழ்வது எப்படி நன்மை தராதோ அது போல உன்னை உடன் கொண்டு வாழ்வதால் வருவது தீமையே என்பான் "நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ" என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Because you are afraid, you are no man for battle;
- you have made those men your refuge and your support;
- your mind is full of treachery; you have changed your very birth;
- is it good to live keeping poison by one's side?"
What the poem says
Irāvaṇaṉ continues his tirade. Vīṭaṇaṉ is a coward, unfit for war, who has taken the humans as his refuge. He has given up the nature of his demon birth, and keeping him close is like living with poison. Later in the epic Kumpakaruṇaṉ himself tells Irāmaṉ that Vīṭaṇaṉ follows the path of justice rather than the narrow ways of his birth.