கம்பராமாயணம் 6512 · யுத்த 4.106

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மற்று இனி உரைப்பது என்னோ? மாருதி வடித்துச் சொன்ன
பெற்றியே பெற்றி; அன்னது அன்று எனின், பிறிது ஒன்றானும்,
வெற்றியே பெறுக, தோற்க, வீக, வீயாது வாழ்க,
பற்றுதல் அன்றி உண்டோ, புகல் எமைப் பகர்கின்றானை.

பொருள் · Meaning in Tamil

மற்று இனி உரைப்பதென்னோ - இனி வேறாக உரைப்பதற்கு என்ன உண்டு? மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி - அனுமன் ஆராய்ந்து கூறிய ஆலோசனையே மேலான ஆலோசனை; அன்னது அன்று எனில் - (வீடணனை ஏற்றுக் கொள்ளுதலாகிய அது அல்ல என்றால், பிறிது ஒன்றானும் - அனுமன் சொன்னது நாம் செய்யத்தகாததாயினும்; வெற்றியே பெறுக - வீடணனை ஏற்றுக் கொள்வதால் வெற்றியே உண்டாகட்டும்; தோற்க வீக வீயாது வாழ்க - நாம் தோற்கட்டும் அழியட்டும் அழியாது வாழட்டும்; அடைக்கலம் பகர்கின்றானை - அபயம் என்று வந்தவனை நாம் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறேதும் உள்ளதோ? இல்லையென்பதாம்.

அனுமன் கருத்தும் தனது கருத்தும் ஒன்றே என்பதால் வேறுதனியாக நான் கூற வேண்டியதில்லை என்பதால் "மற்று இனி உரைப்பது என்னோ” என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "What more is there to say now? What Māruti has refined and spoken
  2. is the right way indeed; and even if it were not so, even if it were otherwise,
  3. whether we win, or lose, or perish, or live on unperishing,
  4. is there anything to do but take in one who asks for refuge?"

What the poem says

Irāmaṉ declares that Aṉumaṉ's view is his own. But he goes further: even if Aṉumaṉ were wrong, it would make no difference.

Whatever the outcome, victory, defeat, death or survival, one who asks for refuge must be accepted. For Irāmaṉ, protecting a suppliant is an absolute duty, not a calculation of advantage.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṟṟu iṉi uraippatu eṉṉō? māruti vaṭittuc coṉṉa
peṟṟiyē peṟṟi; aṉṉatu aṉṟu eṉiṉ, piṟitu oṉṟāṉum,
veṟṟiyē peṟuka, tōṟka, vīka, vīyātu vāḻka,
paṟṟutal aṉṟi uṇṭō, aṭaikkalam pakarkiṉṟāṉai.