கம்பராமாயணம் 6511 · யுத்த 4.105

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கருத்து உற நோக்கிப் போந்த காலமும் நன்று; காதல்
அருத்தியும் அரசின் மேற்றே; அறிவினுக்கு அவதி இல்லை;
"பெருத்து உயர் தவத்தினானும் பிழைத்திலன்" என்னும் பெற்றி
திருத்தியது ஆகும் அன்றே, நம்வயின் சேர்ந்த செய்கை.

பொருள் · Meaning in Tamil

கருத்து உற நோக்கி - (வீடணன்) கருத்துடன் ஆய்ந்து பார்த்து; போந்த காலமும் நன்று - இங்கு வந்த சமயமும் நல்லதே; காதல் அருத்தியும் - அவன் கொண்டிருக்கும் பெரிய விருப்பமும்; அரசின் மேற்றே - இலங்கை அரசின் மேலான வீட்டரசே; அறிவினுக்கு அவதி இல்லை - (அதற்கேற்றபடி) இவனுடைய அறிவுக்கு எல்லையே இல்லை; பெருத்து உயர்தவத்தினானும் - பெரிய உயர்ந்த தவஒழுக்கத்தாலும்; பிழைப்பு இலன் - குறையுடையவன் அல்லன்; என்னும் பெற்றி - என்னும் தன்மை; திருத்தியதாகுமன்றே நம் வயின் சேர்ந்த செய்கை - நமது பக்கம் சேர்ந்த செய்கை ஒன்றே விளக்குமல்லவா?

'காலமே நோக்கினும் ஏலுமே' என நீலன் கூறியதை (6465) மறுப்பவன் போல் 'போந்த காலமும் நன்று' என்றது குறிப்பிடத்தக்கது. 'காதல் அருத்தியும்' அரசின் மேற்றே என்பதற்கு இலங்கை ஆட்சியின் மீதே என்றும் பொருள் கூற இடமுண்டு. எனினும் அது சிறப்புடைய கருத்தன்று. வீடணன் பேரறிவுக்கும், உயர்ந்த தவ ஒழுக்கத்துக்கும், ஞான உணர்வுக்கும் வெற்றரசு நாடியதாகக் கொள்ளல் பொருந்தாது. 'திருத்தியதாகும்' என்பதற்கு வீடணன் அரக்கப்பிறப்பில் இருந்து நீதியால் வந்த நெடுந்தரும நெறியினனாகத் திருந்தியதாகவும் கூறுதல் பொருந்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "He weighed things carefully, and the time of his coming is good; his loving
  2. desire is set on a kingdom higher than any throne; his wisdom has no limit;
  3. that he is without fault, through his great and lofty penance —
  4. is not this nature made plain by his very act of joining us?"

What the poem says

Irāmaṉ begins his verdict by endorsing Aṉumaṉ. Answering Nīlaṉ's doubt about timing, he says Vīṭaṇaṉ chose his moment wisely.

His desire, says Irāmaṉ, is for a kingdom "higher" than Ilaṅkai, that is, spiritual release. The commentary grants that it could mean the throne of Ilaṅkai, but thinks that reading unworthy of Vīṭaṇaṉ's wisdom and austerity. His coming over to Irāmaṉ is itself proof of his goodness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karuttu uṟa nōkkip pōnta kālamumnaṉṟu; kātal
aruttiyum araciṉ mēṟṟē; aṟiviṉukku avati illai;
"peruttu uyar tavattiṉāṉum piḻaippu ilaṉ" eṉṉum peṟṟi
tiruttiyatu ākum aṉṟē, namvayiṉ cērntaceykai.