கம்பராமாயணம் 6510 · யுத்த 4.104
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மாருதி அமுத வார்த்தை செவி மடுத்து - அனுமன் கூறிய அமுதம் போன்ற வார்த்தைகளை இராமபிரான் காதாரக் கேட்டு; இனிது மாந்தி - (இனிய அமுதருந்தியது போல) மனத்தால் அனுபவித்து; பேரறிவாள! நன்று நன்று என - பேரறிவுடையவனே நல்லது நல்லது என்று; பிறரை நோக்கி - மற்றவர்களை எல்லாம் பார்த்து; சீரிது - அனுமன் கூறியவை சிறந்த கருத்துக்கள்; மேல் இம்மாற்றம் தெளிவுறத் தேர்மின் - பின்னால் இவன் கூறிய மாற்றத்தை தெளிவாகத் தெரிந்து கொள்வீர்கள்; என்னா ஆரியன் உரைப்பதானான் - என்று மேலோனாகிய இராமன் கூறலானான்; அனைவரும் அதனைக் கேட்டார் - எல்லோரும் இராமபிரான் கூறியதைக் கேட்கலாயினர்.
அனுமன் கூறிய சொற்களை அமுதம் உண்பவனைப் போல இனிது கேட்டு மகிழ்ந்தான் என்பதால் 'மாருதி அமுத வார்த்தை செவிமடுத்து இனிது மாந்தி' என்றார். மாந்தி - பருகி (குடித்து). அனுமன் கூறிய உரையால் அவனது பேரறிவை வியந்த ராமபிரான் 'பேரறிவாள' என அழைத்தான். ஆரியன் மேலோனாகிய இராமபிரான். இனிவரும் 15 பாடல்கள் இராமபிரான் கூற்றாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Taking in Māruti's nectar-like words with his ears and drinking them sweetly,
- "O man of great wisdom! Well said, well said!" he exclaimed, and looking at the others:
- "This is excellent; now weigh these words so as to see them clearly,"
- the noble one began to speak, and all of them listened.
What the poem says
The metre changes again as Irāmaṉ responds. He savours Aṉumaṉ's speech as if drinking nectar and praises him warmly.
Turning to the other counsellors, he asks them to consider Aṉumaṉ's words carefully, and begins his own reply. The next fifteen verses are Irāmaṉ's speech.