கம்பராமாயணம் 6509 · யுத்த 4.103
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காதல் நான்முகனாலும் கணிப்பரிய - கலைகளில் விருப்பம் மிக்க பிரமனாலும் இவ்வளவினதென்று கணிக்க இயலாத; கலை அனைத்தும் - எல்லாக்கலைகளையும்; கதிரோன் முன் சென்று ஓதினான் - சூரியனுக்கு முன் சென்று அவனிடம் கற்றுத் தேர்ந்தவனும்; ஓத நீர்கடந்து - குளிர்ந்த நீர் நிறைந்த கடலைத்தாண்டி; பகை கடந்து - பகைவர்களாகிய இலங்கை அரக்கரை வென்று; உலகை உய்யக்கொண்டான் - இவ்வுலகத்தை உய்யுமாறு செய்தவனுமான அனுமன் (இராமனை நோக்கி); ஆதலால் இவன் வரவு நல்வரவே என உணர்ந்தேன் அடியேன் - ஆதலினால் இந்த வீடணனது வருகை நன்மையான வருகையே என நான் உணர்ந்தேன்; வேத நூல் எனத் தகைய - வேத நூல் என்று சொல்லத்தகுந்த; உன்றன் திருஉளத்தின் குறிப்பு அறியேன் - உனது திருவுள்ளக் கருத்தை நான் அறியேன்; என்று விட்டான் - என்று கூறி முடித்தான்.
இராமன் திருவுள்ளத்தில் வேதக்கருத்துக்கள் நன்கு பதிந்திருந்ததால் 'வேத நூல் எனத்தகைய திருவுள்ளம்' என்றான். நான் இவன் வரவு நல்வரவே என உணர்ந்தேன். உனது திருவுள்ளம் என்ன நினைக்கின்றதோ அதை அறியேன் என்பான். "திருவுள்ளத்தின் கருத்தறியேன்” என்றான். ஓடுகின்ற கதிரவனுக்கு முன்னால் முகம் காட்டிப் பின்புறமாக ஓடிக்கொண்டே கதிரவனிடம் எல்லாக் கலைகளையும் கற்றவன் அனுமன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "And so I, your servant, have judged that his coming is a good coming; the intent
- of your sacred heart, which is like the Vedic scripture itself, I do not know" — and so he ended,
- he who went before the Sun and learned all the arts, which even loving Brahmā
- could hardly reckon, who crossed the surging sea, overcame the foe, and brought the world to safety.
What the poem says
Aṉumaṉ closes his speech. His own conclusion is that Vīṭaṇaṉ's coming is good, but he leaves the final decision to Irāmaṉ, whose mind is as authoritative as the Vedas.
The poet praises Aṉumaṉ: he learned every art from the Sun himself, running backwards before the Sun's chariot so as to keep facing his teacher. He also leapt the ocean, defeated the rākṣasas, and so brought hope to the world.