கம்பராமாயணம் 6508 · யுத்த 4.102

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'பகை புலத்தோர் துணை அல்லர்" என்று இவனைப் பற்றேமேல் அறிஞர் பார்க்கின்
நகைப்புலத்தது ஆம் அன்றே; நல் தாயம் உளது ஆய பற்றால் மிக்க
தகைப்புலத்தோர் தந்தையர்கள் தம்பியர்கள் தமையர் இவர் தாமே அன்றே,
மிகைப்புலத்து விளைகின்றது ஒருபொருளைக் காதலிக்கின் விளிஞர் ஆவர்?

பொருள் · Meaning in Tamil

பகைப்புலத்தோர் துணை அல்லர் - பகைவர்களைச் சேர்ந்த இவர்கள் நமக்குத் துணை ஆகமாட்டார்கள்; என்று இவனைப் பற்றோமேல் - என்றெண்ணி, இந்த வீடணனை நாம் ஏற்றுக்கொள்ள வில்லை என்றால்; அறிஞர் பார்க்கின் - கற்றறிந்த அறிஞர்கள் பார்த்தார் என்றால், நகைப்புலத்தது ஆம் அன்றே - அவர்களது சிரிப்புக்கு இடமாகுமல்லவா? நல்தாயம் உளதாய பற்றால் - நல்ல தாயத்தவர்களாக உள்ள பற்றினால்; மிக்க தகைப்புலத்தோர் - மிகுந்த அன்பு மிக்க தகுதி உடையவர்களான; தந்தையர்கள் தம்பியர்கள் தமையர் - தந்தை, தம்பி, தமையனாகிய; இவர்தாமே அன்றோ - இவர்கள் தாமே; மிகைப்புலத்து விளைகின்ற ஒருபொருளை - மேம்பாட்டுக்குரியதாய் விளைந்துள்ள ஒரு பொருளை; காதலிக்கின் விளிஞர் ஆவர் - விரும்புவார்களாயின் பகைவர் ஆவார்கள்.

விளிஞர் பகைவர். தாயபாகம் பற்றிய சச்சரவுகளால் தாயத்தார் பகைவராவார்; வீடணனைப் போன்றவர்கள் கைவிடத்தக்கவரல்லர் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "If we refuse him, saying, 'Those from the enemy's land are no allies,' then, should the wise look on,
  2. it would surely be a matter for laughter; for is it not these very ones — fathers, younger brothers,
  3. elder brothers, of great worth and bound by the ties of a shared inheritance —
  4. who turn into foes, when they covet some one thing of surpassing value?"

What the poem says

Aṉumaṉ argues that "enemy" and "kin" are not fixed categories. Fathers, brothers and elder brothers, bound together by a family inheritance, become bitter enemies when they quarrel over something precious.

So Vīṭaṇaṉ's break with his own brother is nothing strange, and to refuse him merely because he comes from the enemy camp would make Irāmaṉ's side a laughing-stock among the wise.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'pakaip pulattōr tuṇai allar" eṉṟu ivaṉaip paṟṟōmēl aṟiñar pārkkiṉ
nakaip pulattatām aṉṟē; nal tāyam uḷatu āya paṟṟāl mikka
takaip pulattōr tantaiyarkaḷ tampiyarkaḷ tamaiyar ivartāmē aṉṟō,
mikaip pulattu viḷaikiṉṟatu oru poruḷaik kātalikkiṉ viḷiñar āvar?