கம்பராமாயணம் 6507 · யுத்த 4.101
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கொற்ற வேந்தே - வெற்றியை உடைய வேந்தனே! தேவர்க்கும் தானவர்க்கும் - தேவர்களுக்கும், அசுரர்களுக்கும்; திசை முகனே முதலாய தேவதேவர் மூவர்க்கும் - பிரமன் முதலான தேவர்களுக்கெல்லாம் மேலான மும்மூர்த்திகளுக்கும்; முடிப்பரிய காரியத்தை - செய்து முடிக்க இயலாத செயல்களை எல்லாம்; முற்றுவிப்பான் மூண்டு நின்றாய் - நிறைவேற்றி முடிப்பதற்கு நீ முனைந்து நின்றாய்; (அத்தகைய நீ); ஆவத்தின் வந்து அபயம் என்றானை - தனக்கு ஆபத்து வந்த காலத்திலே 'அடைக்கலம்' என்று வந்த வீடணனை; அயிர்த்து அகல விடுதி ஆயின் - சந்தேகப்பட்டு ஏற்றுக் கொள்ளாது புறம் செல்ல விடுவாயானால்; கூவத்தின் சிறு புனலை கடல் அயிர்த்தது ஒவ்வாதோ - கிணற்றிலுள்ள சிறிய அளவுள்ள தண்ணீரை, கடல் அயிர்த்ததற்கு ஒப்பாகாதோ? ஆகும் என்பதாம்.
தேவர், அரக்கர் திசைமுகன் முதலான மூவர் ஆகிய இவர்களாலும் செய்ய இயலாத பெரிய செயல்களை யெல்லாம் செய்து நிறைவேற்ற நீ முனைந்து நிற்கிறாயே இத்தகைய பெருமை உடைய நீ ஆபத்துக்காலத்தில் அடைக்கலம் என வந்தவனைக் கைவிடலாமா என்பான் 'ஆவத்தில் அபயம் என்றவனை அயிர்த்து அகல விடுதியாயின்' என்றான். கிணற்று நீரைக் கடல் சந்தேகிப்பது போன்றது, நீ இவனைச் சந்தேகிப்பதாகும் என்றான். ஆவத்து - ஆபத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "For the gods, for the titans, and for the three gods of gods, the Four-faced One first among them,
- you have set yourself to accomplish the task they could not accomplish;
- if you doubt one who has come in his distress crying 'Give me shelter!' and send him away,
- would that not be like the ocean distrusting the little water of a well? O victorious king!"
What the poem says
Aṉumaṉ appeals to Irāmaṉ's greatness. Irāmaṉ has undertaken to destroy Irāvaṇaṉ, a task beyond the gods, the asuras, and even the Trinity of Brahmā, Viṣṇu and Śiva.
For one so mighty to fear a lone refugee would be absurd, like the vast ocean being wary of the water in a well. The image says Vīṭaṇaṉ cannot possibly threaten Irāmaṉ.