கம்பராமாயணம் 6506 · யுத்த 4.100

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"பெற்று உடைய பெருவரமும், பிறந்துடைய வஞ்சனையும், பிறவும் உன்கை
வில் தொடையின் விடுகணையால் வெந்து ஒழியும்'' எனக்கருதி விரைவில் வந்தான்;
உற்றுடைய பெருவரமும் உகந்துடைய தண் அளி உம் உணர்வும் நோக்கின்,
மற்று உடையர்தாம் உளரோ, வாள் அரக்கன் அன்றியே தவத்தின் மிக்கார்.

பொருள் · Meaning in Tamil

பெற்றுடைய பெரு வரமும் - இராவணன் தவம் செய்து பெற்ற பெரிய வரங்களும்; பிறந்துடைய வஞ்சனையும் - அவன் பிறந்த போதே உடன் பிறந்த வஞ்சகம் முதலிய தீய குணங்களும், பிறவும் - மற்றும் அவன் பெற்ற ஆட்சி, செல்வம் போன்றவையும்; உன் கை வில் தொடையின் விடுகணையால் - உனது கையில் தாங்கியுள்ள வில்லின் தொடையிலிருந்து விடும் அம்புகளால்; வெந்து ஒழியும் எனக் கருதி - வெந்து அழியும் என்று எண்ணி; விரைவில் வந்தான் - உன்னைச் சரண்புக விரைந்து இங்கு வந்தான்; உற்றுடைய பெருவரமும் - இந்த வீடணன் பெற்றுள்ள நல்ல பெரிய வரங்களும்; உகந்துடைய தண்ணளியும் - இவன் விரும்பி அடைந்துள்ள கருணைப்பண்பும்; உணர்வும் நோக்கின் - இவனுடைய ஞான உணர்வையும் ஆராய்ந்தால்; வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் - வாட்போரில் வல்ல அரக்கர் குலத்தவனான இந்த வீடணனைக் காட்டிலும் தவத்தில் சிறந்தவர் யாருண்டு? மற்று உடையர் தாம் உளரோ - இத்தகைய நல்ல பண்புகள் வாய்த்தவர் வேறு எங்கும் உளரோ?

இராவணன் வரம் பல பெற்றான். அவன் பிறந்த போதே உடன் பிறந்தது வஞ்சகம் என்பான். "பிறந்துடைய வஞ்சகமும்” என்றான். வீடணன் உற்ற பெருவரம் தெய்வ பக்தியும் அந்தணர் முனிவர் ஆகியோரிடம் அன்பும் என்பனவாம். அரக்கன் என்பதால் நம்முடன் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று கூறியவர்களை மறுத்துரைப்பவனைப் போல, இவனுக்குள்ள நல்ல பண்புகள் வேறு யாருக்குண்டு என்கிறான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Thinking, 'The great boons he has won, the deceit born with him, and all the rest
  2. will be burnt away by the arrows loosed from the bow in your hand,' he came in haste;
  3. and if one looks at the great boon he himself has gained, the cool grace he has cherished, and his wisdom,
  4. is there anyone else who has them — who, apart from this rākṣasa of the sword, has been so blessed by penance?"

What the poem says

The metre changes to a longer six-foot line as Aṉumaṉ reaches the climax of his speech. Vīṭaṇaṉ has foreseen that all Irāvaṇaṉ's boons, his inborn treachery, and his power will be burnt up by Irāmaṉ's arrows, so he has hurried to seek refuge.

Vīṭaṇaṉ's own boon, the commentary explains, is his devotion to God and his love for sages and Brahmins. Answering those who reject him for being a rākṣasa, Aṉumaṉ asks who else has such virtue, compassion and wisdom.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"peṟṟuṭaiya peru varamum, piṟantuṭaiya vañcaṉaiyum, piṟavum uṉ kai
vil toṭaiyiṉ viṭukaṇaiyāl ventu oḻiyum'' eṉak karuti viraiviṉ vantāṉ;
uṟṟuṭaiya peru varamum ukantu uṭaiya taṇṇaḷiyum uṇarvum nōkkiṉ,
maṟṟu uṭaiyartām uḷarō, vāḷ arakkaṉ aṉṟiyē tavattiṉ vāyttār.