கம்பராமாயணம் 6505 · யுத்த 4.99

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்னவன் தனிமகள் - இந்த வீடணனுடைய ஒப்பற்ற மகளான திரிசடை என்பவள்; என்னுடை இறைவிக்கும் - என்னுடைய தெய்வமான சீதா பிராட்டிக்கும்; அலரின் மேல் அயன் சொன்னதோர் சாபம் உண்டு - தாமரை மலரில் வசிக்கும் பிரமதேவன் சொன்ன ஒரு சாபம் உண்டு; நன்னுதல் உன்னைத் துன்மதி தீண்டு மேல் - நல்ல நெற்றியை உடையவளே! உன்னைத் துன்மதியுடைய இராவணன் தீண்டுவானானால்; கூற்று நணுகும் - எமன் அவன் உயிரைக் கவர வருவான்; என இனிது கூறினாள் - என்று இனிதே கூறி, ஆற்றுவித்தாள்.

'விரும்பாத எந்தப் பெண்ணை இராவணன் தீண்டினாலும் அவன் தலைவெடித்துச் சாவான்' என்பது இராவணனுக்கு பிரமன் தந்த சாபம். இந்த உண்மையை அறிந்திருந்த திரிசடை சீதாபிராட்டிக்குக் கூறி, ஆறுதல் அளித்தாள், வீடணன் மட்டுமின்றி அவன் மகளும் அறநெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்தவராவார் என வீடணன் குடும்பத்தினரையும் சிறப்பித்துப் பேசினான் என்க. துன்மதி - கெட்டபுத்தியை உடைய இராவணன். நன்னுதல் - நல்ல அழகிய நெற்றியை உடையவள் (சீதா பிராட்டி).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "His only daughter told my queen, kindly,
  2. 'There is a curse that Brahmā, seated on the lotus, pronounced:
  3. O lady of fair brow, if that evil-minded one
  4. should touch you, Death will draw near him.'"

What the poem says

Aṉumaṉ adds the testimony of Vīṭaṇaṉ's daughter, Tiricaṭai. In the Asoka grove she comforted Cītai, whom Aṉumaṉ reverently calls "my queen".

She told her of Brahmā's curse: if Irāvaṇaṉ ever touched a woman against her will, his head would burst and he would die. So Cītai was safe. Aṉumaṉ's point is that Vīṭaṇaṉ's whole household is righteous, even his daughter.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṉavaṉ taṉi makaḷ" alariṉmēl ayaṉ
coṉṉatu ōr cāpam uṇṭu; "uṉṉait tuṉmati
naṉṉutal! tīṇṭumēl naṇukum kūṟṟu" eṉa
eṉṉuṭai iṟaivikkum iṉitu kūṟiṉāḷ.