கம்பராமாயணம் 6504 · யுத்த 4.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நிந்தனை நறவமும் - மேலோர்களின் நிந்தனைக்குரிய மதுவும்; நெறியில் ஊன்களும் - தீயநெறியால் வந்த ஊன் உணவுகளும்; தந்தன கண்டிலேன் - வீடணன் இல்லத்தில் பரிமாறப்படுவதைப் பார்த்திலேன்; தரும தானமும் வந்தனை நீதியும் பிறவும் - அறநெறிப்படி அமைந்த தானங்களும், தெய்வ வழிபாட்டு முறைகளும் வேறு நல்ல பழக்க வழக்கங்களும்; மாண்பு அமைந்து - வேறு பல மாண்புகளும் அமைந்து; அந்தணர் மனை எனப் பொலிந்தது - அந்தணர்களது இல்லத்தைப் போல இவன் இல்லம் பொலிந்து விளங்கியது.
நிந்தனை - மேலோர்களால் வெறுத்துக் கூறப்படுதல். நெறிஇல் ஊன் - கொலை முதலிய தீய நெறியால் வந்த ஊன் உணவு வகைகள். தந்தன இருக்கக்கண்டிலேன் - பார்த்திலேன். இலங்கையில் பிற அரக்கர் மாளிகைகளில் நறவும், ஊனும் நிறைந்து காணப்பட்டனவாதலின், மாறுபட்டு விளங்கிய வீடணன் மனையின் சிறப்பைக் கூறலானான் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "I saw no blameworthy liquor there, nor meat
- got by wrongful ways set out; rather, righteous giving,
- rites of worship, right conduct and other such things abounded,
- and it shone like the home of a Brahmin."
What the poem says
Aṉumaṉ describes what he saw in Vīṭaṇaṉ's house. Every other rākṣasa mansion he searched was full of drink and meat. Vīṭaṇaṉ's had neither.
Instead it was marked by charity, worship and good conduct, so that it looked like the home of a pious Brahmin. This is strong evidence of Vīṭaṇaṉ's real character.