கம்பராமாயணம் 6503 · யுத்த 4.97
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆழியாய் - ஆணையாகிய சக்கரத்தை உடையவனே! எல்லியில் யான் இவன் இரண மாளிகை செல்லிய போதினும் - இரவு நேரத்தில் நான் இந்த வீடணனுடைய பொன்மாளிகைக்குச் சென்றபோதும்; திரிந்த போதினும் - இலங்கை முழுதும் சுற்றித் திரிந்த போதும்; நல்லன நிமித்தங்கள் நனி நிகழ்ந்தன - மிகுதியான நல்ல சகுனங்களே நிகழ்ந்தன; அல்லதும் நான் அறிந்தது உண்டு - அதுவுமல்லாமல் நான் தெரிந்து கொண்ட வேறு சில செய்திகளும் உண்டு.
எல்லி - இரவுப்பொழுது. இரணம் - பொன். வீடணன் வாழ்ந்த மாளிகை பொன்மயமானது என்பதால் 'இரண மாளிகை' என்றான். அனுமன் இலங்கைக்குச் சென்றிருந்தபோது சீதையைத் தேடிப் பல இடங்களுக்கும் சென்ற போதும் வீடணனது மாளிகைக்கும் சென்ற போதும் தான் பார்த்த நல்ல நிமித்தங்களையும் நினைந்து பார்த்துக் கூறுகிறான். "நல்ல நிமித்தங்கள் நனி நிகழ்ந்தன' எனத்தன் மகிழ்ச்சி தோன்றப் பேசுகிறான் எனலாம். இலங்கையில் நான் அறிந்த வேறு பலவும் உண்டு என்பான் "அல்லதும் நான் அறிந்தது உண்டு" என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "At night, when I went into this man's golden mansion,
- and while I roamed about,
- good omens occurred in plenty;
- and there is more that I came to know, O bearer of the discus."
What the poem says
Aṉumaṉ recalls his night search of Ilaṅkai for Cītai. When he entered Vīṭaṇaṉ's golden palace, and as he roamed the city, he met with many auspicious omens.
He hints that he also learned other things there, which he goes on to describe.