கம்பராமாயணம் 6502 · யுத்த 4.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாதரைக் கோறலும் - அபலைகளான பெண்களைக் கொல்வதும்; மறத்து நீங்கிய ஆதரைக் கோறலும் - வீரமற்ற அறிவிலிகளைக் கொல்லுவதும்; அழிவு செய்யினும் - நமது அழிவுக்குரிய செயல்களைச் செய்தார்கள் என்றாலும்; தூதரைக் கோறலும் - தூது வந்தவர்களைக் கொல்வதும்; தூய்து அன்றாம் - தூய செயல் ஆகாது என்று; ஏதுவில் சிறந்தன எடுத்துக்காட்டினான் - சிறந்த காரணங்களை எடுத்துக்கூறி நிறுவினான்.
அனுமனைக் கொல்லும்படி கூறக்காரணம் அவன் அசோகவனத்தை அழித்தது. வீரர்களைக் கொன்றது போன்ற அழிவுச்செயல்களைச் செய்ததே என்பதால் அழிவு செய்யினும் தூதரைக் கோறலும் என்றான். 'மறத்து நீங்கிய என்பதனை மாதர் ஆதர் ஆகிய இரு திறத்தாருக்கும் கூட்டி உரைத்தல் பொருந்தும். ஆதர் - அறிவில்லாதவர். மாதர் - வீரமற்ற மகளிர். கோறல் - கொல்லுதல். தூய்து - தூயது. ஏது - காரணம். தூதரைக் கொல்லுதல் தூயதல்ல என்ற வீடணன் அதனோடு தொடர்புள்ள மாதர் ஆதர் என்பவர்களையும் சேர்த்துக் கூறினான் போலும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "'To slay women, to slay simple folk
- who have no part in war, and, even if they have wrought destruction,
- to slay envoys — these are not clean deeds' —
- so he set forth the best of reasons."
What the poem says
Aṉumaṉ recalls Vīṭaṇaṉ's argument in Irāvaṇaṉ's court. Killing women, killing the helpless and foolish who are no warriors, and killing envoys are all dishonourable, even when the envoy has caused damage.
Aṉumaṉ had in fact destroyed the Asoka grove and killed many rākṣasa warriors, which is why Irāvaṇaṉ wanted him dead. Vīṭaṇaṉ defended him on principle.