கம்பராமாயணம் 6514 · யுத்த 4.108
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பிறந்தநாள் தொடங்க - எவரும் தாம் பிறந்தநாள் முதலாக; துலை புக்கபெரியோன் பெற்றி - ஒரு புறாவுக்காகத் தானே தராசுக் கோலில் சென்றமர்ந்த பெரியோன் ஆகிய சிபிச் சக்கரவர்த்தியின் பெருமையை; யாரும் மறந்த நாள் உண்டோ - எவரேனும் மறந்த ஒரு நாளும் உள்ளதோ? இல்லை அன்றோ? என்னைச்சரண் என வாழ்கின்றானை - என்னை அடைக்கலம் என்று கூறி வந்து வாழ இருக்கும் இந்த வீடணன்; துறந்த நாட்கு - ஏற்றுக்கொள்ளாது விலக்கிய நாளைவிட; இன்று வந்து துன்னினான் - இன்று இங்கு வந்து நம்மை அடைந்த இவனுடைய; சூழ்ச்சியாலே - வஞ்சகச் செயல்களால்; இறந்த நாள் அன்றோ - நான் இறக்க நேர்ந்தால் அவ்வாறு இறந்த நாள் அல்லவா; என்றும் இருந்த நாள் ஆவது என்றான் - நான் என்றும் நிலை பெற்றிருந்த நாள் ஆவது என இராமன் கூறினான்.
துலைபுக்க பெரியோன் - சிபிச்சக்கரவர்த்தி. இன்று வந்து நம்மைச் சேர்ந்த இவனுடைய சூழ்ச்சியாலே நான் இறக்க நேர்ந்தால் அந்த நாளே நிலைபெற்றிருக்கும் நாளாகும் என்பதை 'சூழ்ச்சியாலே இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள்' என்றான். சிபியை உலகம் மறந்த நாள் இல்லை. அந்த மன்னன் வழிவந்த நான் அடைக்கலம் என்று வந்தவனை ஏற்றுக்கொள்வது தானே முறை என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Since the day they were born, has anyone ever forgotten the greatness
- of the noble one who climbed onto the scales? Rather than the day I cast off
- one who lives by taking me as his refuge, the day I die
- through the plotting of this man who has come to me today — that would be the day I live for ever," he said.
What the poem says
Irāmaṉ recalls his ancestor King Śibi, who, to save a dove that had sought his protection from a hawk, cut flesh from his own body and finally sat on the scales himself to match the bird's weight. The world has never forgotten him.
Irāmaṉ, of the same line, would rather die through Vīṭaṇaṉ's treachery than reject him. Such a death would make him immortal in fame, whereas turning away a refugee would be the real death.