கம்பராமாயணம் 6515 · யுத்த 4.109
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இடைந்தவர்க்கு - (பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சுக்கு அஞ்சி விலகி வந்தவர்களும்; அபயம் யாம் என்று இரந்தவர்க்கு - நாங்கள் உனக்கு அடைக்கலம் என்று கெஞ்சியவர்களும்; எறி நீர் வேலை கடைந்தவர்க்கு ஆகி - அலை எறியும் பாற்கடலைக் கடைந்தவர்களும் ஆன தேவர்களுக்காக; ஆலம் உண்டவற் கண்டிலீரோ - நஞ்சைத்தான் உண்டு, அவர்களைக்காத்த சிவபிரானை நீங்கள் கண்டதில்லையா? உடைந்தவர்க்கு உதவானாயின் - தோல்வியால் சிதைந்து நொந்தவர்களுக்கு உதவவில்லை என்றால்; உள்ளது ஒன்று ஈயானாயின் - தன்னிடம் உள்ள பொருளைக் கேட்டுவந்தவர்களுக்குத் தரவில்லை என்றால்; அடைந்தவர்க்கு அருளானாயின் - அடைக்கலம் என்று வந்தவர்களுக்குக் கருணைகாட்டி அருள் செய்யவில்லை என்றால்; அறம் என்னாம் ஆண்மை என்னாம் - அறத்தால் என்னபலன்? ஆண்மையால் என்ன பயன்?
எறிநீர் வேலை - அலை பொங்கும்கடல். ஆலம் - நஞ்சு. உடைந்தவர் - பகைவருக்குத் தோற்று வந்தவர்கள். வலிமைக்குறைவால் தோல்வியைத் தழுவியவர்களுக்கும் உதவவில்லை என்றாலும் வறுமையால் நாடிவந்து இரந்தவர்களுக்கு ஒரு பொருள் தரவில்லை என்றாலும், அடைக்கலம் என்று வந்தவர்களை ஏற்று அருளவில்லை என்றாலும் அறத்தாலும் ஆண்மையாலும் எந்தப் பயனுமில்லை என்பதை 'அறம் என்னாம்? ஆண்மை என்னாம்?” என்றான். அடைக்கலம் புகுந்த தேவர்களைக்காக்க, நஞ்சினை உண்ட சிவபெருமானை நீங்கள் அறியவில்லையா என்பான். "கண்டிலீரோ" என்றான். இடைதல் - அஞ்சுதல். உடைதல் - தோற்றல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "For those who fled in fear and begged, 'We seek your shelter,'
- for those who churned the wave-tossed sea, he took the poison and swallowed it — have you not seen him?
- If one does not help the broken, if one does not give the little one has,
- if one shows no grace to those who come for refuge, what is dharma worth? What is manhood worth?"
What the poem says
Irāmaṉ cites Śiva. When the gods and demons churned the Ocean of Milk, a deadly poison rose up, and the terrified gods ran to Śiva for refuge. He swallowed the poison himself to save them.
From this Irāmaṉ draws a general rule: helping the defeated, giving to those in need, and protecting those who seek shelter are the very substance of righteousness and of true courage. Without them, both are empty.