கம்பராமாயணம் 6516 · யுத்த 4.110
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்கவந்து அடைந்த பேதை வேடனுக்கு - பெண்புறாவைப் பிடித்துக்கொண்டு அதன் ஜோடியான தன்னையும் பிடிக்கவந்திருந்த பேதைத்தன்மையுடைய வேடன் ஒருவனுக்கு; உதவி செய்து - குளிர்காலத்தில் குளிர் மாற்ற உதவியாக; விறகிடை வெந்தீ மூட்டி - விறகு பொறுக்கி வந்து வெப்பமான தீயை மூட்டிக் குளிரைப்போக்கி; பாடுறு பசியை நோக்கி - அவனது பெரும்பசியைப் பார்த்து; தன் உடல் கொடுத்த பைம்புள் - அந்தத்தீயில் வீழ்ந்து தனது உடலையே அவனுக்கு உணவாகக் கொடுத்த ஒரு ஆண்புறா; வீடு பெற்றுயர்ந்த வார்த்தை - பரமபதம் பெற்று உயர்ந்தது என்ற வார்த்தை; வேதத்தின் விழுமிது அன்றோ - வேதத்தைவிட மேலான தொன்றல்லவா?
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The foolish hunter who had caught his mate and come on to catch him too —
- to him the bird gave help, kindling a hot fire among the firewood,
- and, seeing his gnawing hunger, gave him its own body:
- is not the story of that green bird, which won release and rose on high, greater than the Veda?"
What the poem says
Irāmaṉ tells a well-known story of hospitality. A hunter had trapped a female dove and then sheltered from cold under the tree where her mate lived. The male dove, treating the hunter as its guest, gathered sticks and lit a fire to warm him.
Seeing the man starving, the dove then threw itself into the fire to become his meal, and won heavenly release. If even a bird protects one who comes to it, Irāmaṉ implies, how much more must a king.