கம்பராமாயணம் 6519 · யுத்த 4.113
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நஞ்சினை மிடற்று வைத்த - (அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்த தேவர்கள் விஷம் என அஞ்சி அடைக்கலமடைய) அந்த நஞ்சினால் தேவர்கள் நலியாதபடி உண்டு கண்டத்திலே நிறுத்தி வைத்த; நகை மழுவாளன் - ஒளியுடைய மழுவை ஆயுதமாகக் கொண்ட சிவபிரான்; நாளும்தஞ்சு என - வாழ்நாள் குறைவாக (மார்க்கண்டனுக்கு; தாதைபால் கொடுத்து - தந்தையான மிருகண்டு முனிவருக்கு வரம்தந்தும்; சாதல் அஞ்சி அபயம் என்ற - சாவுக்கு அஞ்சினேன் நான் உனக்கு அடைக்கலம் என்று சரணடைந்த; அந்தணர்க்கு ஆகி - மறையவனான மார்க்கண்டனுக்கு அருள்புரிய; அந்நாள் வெஞ்சினக் கூற்றை - அந்த நாளிலே மார்க்கண்டனது உயிரைக் கவரவந்த கொடிய சினத்தை உடைய எமனை; மாற்றும் மேன்மையின் - குறைத்துத் தந்த வாழ்நாளை என்றும் பதினாறாக மாற்றிய சிவபெருமானுடைய மேலான பண்பைவிட; மேன்மை உண்டோ - மேலானது வேறேதும் உண்டோ?
மிடறு - கழுத்து. நகை - ஒளி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The bearer of the gleaming axe, who held the poison in his throat,
- had himself earlier given the father a son with a short span of days;
- yet for the Brahmin boy who cried, 'I fear death! Shelter me!', on that day
- he drove off cruel, raging Death: is there any greatness greater than that?"
What the poem says
Irāmaṉ gives another example from Śiva, the god who holds the poison in his throat and carries a battle-axe. Śiva had granted the sage Mirukaṇṭu a son, Mārkkaṇṭēyaṉ, destined to live only sixteen years.
When Death came for the boy, he clung to Śiva and cried for refuge. Śiva struck down Yama and made the boy sixteen for ever. Even a god will set aside his own earlier decree to protect one who seeks shelter.