கம்பராமாயணம் 6520 · யுத்த 4.114

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'சரண் எனக்கு யார்கொல்?" என்று சானகி அழுது சாம்ப,
"அரண் உனக்கு ஆவென்; வஞ்சி! அஞ்சல்!" என்று அருளின் எய்தி,
முரணுடைக் கொடியோன் கொல்ல, மொய் அமர் முடித்து, தெய்வ
மரணம் என் தாதை பெற்றது என் வயின் வழக்கு அன்று ஆமோ?

பொருள் · Meaning in Tamil

சரண் எனக்கு யார் கொல் என்று - (இராவணனால் கவர்ந்து செல்லப்பட்டபோது) எனக்கு அடைக்கலமளித்துக் காப்பவர் யார் என்று கூறி; சானகி அழுது சாம்ப - சீதா பிராட்டி அழுது சோர்ந்திருக்க; அரண் உனக்கு ஆவென் - நான் உனக்கு அரணாக நின்று காப்பேன்; வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்து - வஞ்சிக் கொடி போல்பவளே அஞ்சாதே என்று கருணை கொண்டு வந்து; முரணுடைக் கொடியோன் கொல்ல - முரண்பட்ட மனம் கொண்ட கொடியவனான இராவணன் வாளால் வெட்டிக்கொல்ல; மொய் அமர் முடித்து - இராவணனுடன் நெருங்கிய போர் செய்து முடித்து; தெய்வ மரணம் என் தாதை பெற்றது - தெய்வீக மரணத்தை எனக்குத் தந்தையான சடாயு பெற்றது; என் வயின் வழக்கன்றாமோ - எனக்கு மட்டும் முறையற்றதாகுமோ? ஆகாது.

சரண் - அடைக்கலம் (புகலிடம்). சாம்ப - சோர்வுற. அரண் - பாதுகாப்பு. அஞ்சல் - அஞ்சாதே. மொய் அமர் - நெருங்கிய போர். சடாயுவைப் பெரிய உடையார் என வைணவ உலகம் போற்றும். அந்தச் சடாயு பெற்ற தெய்வமரணம் நான் பெறுவது முறையாகுவதே என்றான் ராமபிரான். மானமே நேரிலும் சரணடைந்தோரைக் காப்பதே பேரறம் என்பது இராமன் கருத்தாதல் காண்கிறோம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "When Cāṉaki wept and drooped, crying, 'Who will be my refuge?',
  2. he came in compassion, saying, 'I will be your shield; fear not, O slender one!',
  3. fought the close battle to its end, and was slain by that perverse villain:
  4. the divine death my father won — is it not the right path for me too?"

What the poem says

Irāmaṉ turns to an example from his own story. When Irāvaṇaṉ was carrying off Cītai (Cāṉaki, daughter of Caṉakaṉ), she cried out for help. The old vulture-king Caṭāyu answered, promised to protect her, and fought Irāvaṇaṉ until he was cut down.

Irāmaṉ calls Caṭāyu his father, since he was his father Tacarataṉ's friend. If Caṭāyu won a glorious death protecting someone who sought refuge, Irāmaṉ asks, why should he shrink from the same fate?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'caraṇ eṉakku yārkol?" eṉṟu cāṉaki aḻutu cāmpa,
"araṇ uṉakku āveṉ; vañci! añcal!" eṉṟu aruḷiṉ eytu,
muraṇuṭaik koṭiyōṉ kolla, moy amar muṭittu, teyva
maraṇam eṉ tātai peṟṟatu eṉvayiṉ vaḻakku aṉṟu āmō?