கம்பராமாயணம் 6523 · யுத்த 4.117
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காரியம் ஆக அன்றே ஆகுக - நாம் எடுத்த காரியம் முற்றுப் பெறட்டும்; அல்லது முடியாமல் போகட்டும்; கருணையோர்க்குச் சீரிய தன்மை நோக்கின் - கருணையாளர்க்குரிய சிறந்த தன்மையை ஆராய்ந்தால்; இதனின் மேல் சிறந்ததுண்டோ - அடைக்கலம் என்று வந்தவனை ஆதரித்துக் காக்கும் இதைவிட மேலானதொன்றுண்டோ? பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தோர்க்கு - கீழ் மக்களாயினும் தங்களைச் சரணடைந்தவர்களுக்கு, பொன்றா ஆருயிர் கொடுத்துக் காத்தார் - அழியாத தங்களது ஆருயிரைத் தந்தும் காத்தவர்கள்; எண்ணிலா அரசர் அம்மா - எண்ணிலடங்காத மன்னர்கள் (இவ்வுலகிலுண்டு).
காரியம் - மேற்கொண்ட செயல். ஆக - ஆகட்டும். அன்றே ஆகுக - ஆகாமல் போகட்டும். சீரியதன்மை - சிறந்தபண்பு. பூரியர் - கீழ்மக்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Let our task succeed, or let it fail! If one looks
- at the noblest trait of the compassionate, is anything higher than this?
- Even for base men who came to them for shelter,
- countless kings have given up their precious, undying lives to protect them!"
What the poem says
Irāmaṉ declares that the success of the whole campaign matters less than this principle. Whether they win or lose, protecting a refugee is the highest quality of the compassionate.
History offers countless kings who sacrificed their own lives to protect those who sought their shelter, even worthless people. Vīṭaṇaṉ, by contrast, is noble.