கம்பராமாயணம் 6522 · யுத்த 4.116
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேவரைத் தீமை செய்த பேதையை - தேவர்களைத் துன்புறுத்திய அறிவில்லாத இராவணனை; கொல்வேன் என்று பேணிய விரதப் பெற்றி - கொல்லுவேன் என்று நானே விரும்பி ஏற்றுக்கொண்ட இந்த விரதத்தின் தன்மை; சீதையைக் குறித்ததேயோ - சீதையை மீட்டு வருதலைமட்டும் குறித்ததொன்றோ? அல்ல; வேதியர் அபயம் என்றார்க்கு - அந்தணர்கள் என்னை அடைந்து அடைக்கலம் என்றவர்களுக்கு; அன்று நான் விரித்துச் சொன்ன - அவர்கள் சரணடைந்த போது நான் விவரித்துக் கூறிய; காதையைக் குறித்து நின்ற - செய்தியைப் பற்றி நின்ற; அவ்வுரை கடக்கலாமோ - (அஞ்சல் என்று கூறிய) அந்தச் சொல்லை நான் மீறலாமோ?
"அவதரித்துச் செய்த ஆணைத்தொழில்களெல்லாம் ஆசிரத விரோதிகளை அழிப்பதற்கே” என்ற வைணவச் சான்றோர் உரை நினையத்தக்கது. காதை - காதா (பாடல்) இங்கு செய்தியைக் குறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Is the vow I cherished, 'I will slay the fool who wronged the gods,'
- concerned only with Cītai? When the Brahmins said, 'Give us shelter,'
- on that day I spoke out the whole story of my promise to them:
- can I go back on those words that stood upon that pledge?"
What the poem says
Irāmaṉ reminds his council that his vow to kill Irāvaṇaṉ is not merely about rescuing Cītai. Long before, the forest sages came to him for refuge from the rākṣasas, and he solemnly promised to protect them.
His mission is about protecting those who seek shelter. To refuse a refugee now would betray the very purpose of the war. The commentary quotes a Vaiṣṇava saying: all the Lord's acts in his incarnations are for destroying the enemies of those who depend on him.