கம்பராமாயணம் 6525 · யுத்த 4.119
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐயுறவு எல்லாம் தீரும் அளவையாய் - (சுக்கிரீவன்) மனதிலெண்ணிய ஐயமெல்லாம் தீர்ந்து ஒழியத்தக்க பிரமாணமாக; அமைந்தது அன்றே - அமைந்ததொன்றாக; தெய்வநாயகனதுள்ளம் - தெய்வங்களுக்கெல்லாம் நாயகனாகிய இராமபிரானுடைய உள்ளம்; தேறிய அடைவே தேறி - தெளிந்த முறையே நானும்தெளிவு பெற்று; கைபுகற்கு அமைவதானான் - வீடணன் நம்பக்கம் சேருதற்கு உடன்படுவானானான்; கடிதினில் கொணர்வல் என்னா - விரைவில் அவனை இங்கு அழைத்து வருவேன் என்று; மெய்யினுக்கு உறையுளான ஒருவன் பால் விரைவில் சென்றான் - உண்மைக்கு உறைவிடமான ஒப்பற்றவனாகிய வீடணனிடம் விரைந்து சென்றான்.
அளவை - பிரமாணம். அடைவு - முறைமை. அமைவது - உடன்படுவது. இலங்கையில் மெய்தங்குவதற்கு புகலிடமளித்தவன் வீடணன் என்பதால் "மெய்யினுக்கு உறையுள்” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- That had become a proof that ends all doubt;
- in the very way the heart of the Lord of gods was settled, he too grew settled,
- and became willing to receive him; saying, "I will bring him quickly,"
- he went swiftly to the one who was the dwelling place of truth.
What the poem says
Cukkirīvaṉ is fully persuaded. Irāmaṉ's reasoning works as a decisive proof that dissolves all his doubts, and his mind becomes as clear as his lord's.
He agrees to accept Vīṭaṇaṉ and hurries off to fetch him. Vīṭaṇaṉ is called "the dwelling of truth", since in all of Ilaṅkai he alone gave truth a home.