கம்பராமாயணம் 6526 · யுத்த 4.120

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வருகின்ற கவியின் வேந்தை மயிந்தனுக்கு இளவல் காட்டித்
"தருக என்றான் அண்ணல் நின்னை; எதிர் கொளற்கு அருக்கன் தந்த
இருகுன்றம் அனைய தோளான் எய்தினன்''என்னலோடும்,
திரிகின்ற உள்ளத் தானும், அகம் மலர்ந்து அவன்முன் சென்றான்.

பொருள் · Meaning in Tamil

வருகின்ற கவியின் வேந்தை - (வீடணனை அழைத்துச் செல்ல) வருகின்ற வானர வேந்தனான சுக்கிரீவன்; மயிந்தனுக்கு இளைய வள்ளல் - மயிந்தனுக்குத் தம்பியான துமிந்தன்; 'தருக' என்றான் - (வீடணனிடம்) உன்னை அழைத்து வருமாறு இராமபிரான் கூறினான்; அதனால் உன்னை எதிர் கொளற்கு - அதனால் உன்னைச் சந்திப்பதற்கு; அருக்கன் தந்த - சூரியன் புத்திரனாக தந்த; இருகுன்றம் அனைய தோளான் - இரண்டு மலைகளை ஒத்த தோள்களை உடையவனான சுக்கிரீவன்; எய்தினன் என்னலோடும் - இங்கு வந்தான் என்றவுடன்; திரிகின்ற உள்ளத்தானும் - இராமபிரான் ஏற்றுக்கொள்வானோ மாட்டானோ என நினைத்து அலையும் மனத்தினனான வீடணன்; அவன் முன் சென்றான் - சுக்கிரீவனுக்கு முன்பு சென்றான்.

கவியின் வேந்து - சுக்கிரீவன். தருகஎன்றான் - தருகென்றான் என நின்றது. இராமன் தன்னை ஏற்றுகொள்வானோ? மாட்டானோ என்ற ஐயத்தால் ஒரு நிலையில் நில்லாது அலைந்த மனத்தை "திரிகின்ற உள்ளம்” என்றார், துமிந்தன் 'தருகென்றான்' என்று சொல்லக் கேட்டதும் வீடணன் மனம் மகிழ்ந்தது என்பதனை "அகம் மலர்ந்து" என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Of the approaching king of the monkeys, the generous younger brother of Mayintaṉ said,
  2. "He has said, 'Bring him'; and so, to receive you,
  3. the one with shoulders like twin hills, whom the Sun gave,
  4. has come" — and at that, he whose mind had been wavering went before him, his heart blossoming.

What the poem says

Vīṭaṇaṉ has been waiting outside the camp. Tumintaṉ, younger brother of the monkey Mayintaṉ (Mainda), brings him the news: Irāmaṉ has ordered that he be brought in, and Cukkirīvaṉ, son of the Sun, has come in person to receive him.

Vīṭaṇaṉ, who had been anxious and unsure whether he would be accepted, rejoices and goes forward to meet Cukkirīvaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1varukiṉṟa kaviyiṉ vēntai mayintaṉukku iḷaiya vaḷḷal
"taruka eṉṟāṉ ataṉāl uṉṉai; etir koḷaṟku arukkaṉ tanta
iru kuṉṟam aṉaiya tōḷāṉ eytiṉaṉ'' eṉṉalōṭum,
tirikiṉṟa uḷḷattāṉum, akam malarntu avaṉ muṉ ceṉṟāṉ.