கம்பராமாயணம் 6527 · யுத்த 4.121
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தொல் அருங் காலமெல்லாம் பழகினும் - நீண்ட நெடுங்காலம் நெருங்கிப் பழகி வந்தாலும்; தூயர் அல்லார் புல்லர் - மனத்தூய்மையில்லாதவர்கள் ஒன்றுபடமாட்டார்; உள்ளம் தூயார் எதிர்ந்த ஞான்றே பொருந்துவர் - தூயமனம் கொண்ட மேலோர் சந்தித்த அப்போதே ஒன்றிவிடுவர்; ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற - விரைந்து வந்து, ஒத்த உணர்வுடன் சந்தித்த, இருவரும் - சுக்கிரீவன், வீடணன் ஆகிய இருவரும்; ஒருநாள் உற்ற எல்லியும் பகலும் போல - ஒருநாளில் பொருந்திய இரவும் பகலும் போல; எழுவின் தோளார் தழுவினர் - தூண் போன்ற தோளினராகிய அவர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டனர்.
தொல்பெருங்காலம் - பழமையான நீண்ட காலம். "நூறாண்டு பழகினும் மூர்க்கர்கேண்மை நீர்கொள் பாசிபோல் வேர்கொள்ளாதே” ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்கவேர் வீழ்க்கும்மே” என்றது இங்கு நினைவு கூரத்தக்கது. எல்லி - இரவு. எழு - தூண். வீடணன் கருமை நிறம் (இரவு), சுக்கிரீவன் வெண்மை நிறம் (பகல்). எனவே, "இருவரும் ஒருநாள் உற்ற எல்லியும் பகலும் போலத் தழுவினர்” என்பது பொருந்துவதாயிற்று, பொதுப்பொருள் கூறி, சிறப்புப்பொருளை விளக்குவதால் இது வேற்றுப் பொருள்வைப்பணி ஆயிற்று. "தூயரல்லார் புல்லலர் உள்ளம் தூயார் பொருந்துவர்” என்பது பொதுப்பொருள். "சுக்கிரீவனும் வீடணனும் தழுவினர்” என்பது சிறப்புப் பொருள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Though they keep company through long ages, the impure
- do not unite in heart; the pure come together the very day they meet;
- coming swiftly, their feelings at one, the two of them,
- like the night and the day that make up a single day, embraced — they with shoulders like pillars.
What the poem says
Cukkirīvaṉ and Vīṭaṇaṉ meet and embrace at once, as close friends. The poet opens with a general truth: the impure never truly bond however long they live together, while the pure become one at first meeting.
The simile is exact: dark Vīṭaṇaṉ is like night and the fair-coloured monkey king like day, and together they make one whole day. The commentary names the figure: a general maxim followed by a particular instance.