கம்பராமாயணம் 6528 · யுத்த 4.122

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தழுவினர் நின்ற காலை - சுக்ரீவனும் வீடணனும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு நின்றபோது; தாமரைக் கண்ணன் - தாமரை மலர் போன்ற கண்களை உடைய ராமபிரான்; தங்கள் முழு முதல் குலத்துக்கு - தமது சிறந்த முதன்மை வாய்ந்த சூரிய குலத்தின் இயல்புக்கு; ஏற்ற முறைமையால் - பொருந்திய முறைப்படி; உவகை மூள - மனத்திலே மகிழ்ச்சி பொங்க; உன்பால் வழுவல் இல் அபயம் வழங்கினன் - உனக்குக் குறையிலாத அபயத்தை வழங்கினான் எனவே; அவன் பொற்பாதம் - அப்பெருமானது பொன்னடிகளை; விரைவின் தொழுதியால் - விரைந்து வணங்குவாயாக; என்று கதிரவன் சிறுவன் சொன்னான் - என்று வீடணனை நோக்கி சூரியன் மகனான சுக்கிரீவன் கூறினான்.

அடைக்கலம் என வந்தவரை ஏற்றருள் புரிதல் சூரிய குலத்தோருக்குரிய பண்பாதலின் "குலத்துக்கேற்ற முறைமையால்” என்றான். குலத்துக்கேற்ப வழங்கினான் எனினும் தான் விரும்பி வழங்கினானா என்பதற்கு விடையாக "உவகை மூள வழங்கினன்” என்றான். இந்த அபயம் எக்குறையும் இல்லாதது என்பான், வழுவல் இல் அபயம் (என்றும் மாறாதது) என்றான். பெறுதற்கரிய பேற்றினை விரைந்து பெறுக என்பான் 'விரைவின் தொழுதி" என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As they stood embraced, "The lotus-eyed one, in the manner
  2. befitting his great and ancient line, with joy welling up,
  3. has granted you unfailing refuge; go quickly
  4. and worship his golden feet," said the son of the Sun.

What the poem says

Still holding Vīṭaṇaṉ, Cukkirīvaṉ gives him the good news. Irāmaṉ has granted him complete and lasting protection, as is the custom of the Solar dynasty.

Cukkirīvaṉ stresses that the gift was given gladly, not merely from duty, and urges Vīṭaṇaṉ to hurry and bow at Irāmaṉ's feet, so rare a blessing is it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taḻuviṉar niṉṟa kālai, 'tāmaraikkaṇṇaṉ taṅkaḷ
muḻu mutal kulattiṟku ēṟṟa muṟaimaiyāl uvakai mūḷa
vaḻuval il apayam uṉpāl vaḻaṅkiṉaṉ avaṉ poṟ pātam
toḻutiyāl, viraiviṉ' eṉṟu katiravaṉ ciṟuvaṉ coṉṉāṉ.