கம்பராமாயணம் 6529 · யுத்த 4.123
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சிங்க ஏறு அனையான் - ஆண் சிங்கத்தைப் போன்றவனான சுக்கிரீவன்; சொன்ன வாசகம் - கூறிய சொற்கள்; செவிப்படாமுன் - தனது காதுகளில் வீழ்வதற்கு முன்பே; கங்குலின் நிறத்தினான் தன் - இரவு இருள் போன்ற நிறம் உடைய வீடணனது; கண் மழைத்தாரை கான்ற - கண்கள் மழைத்தாரையொத்த நீரைப் பொழிந்தன; அங்கமும் மனமதென்னக் குளிர்ந்தது - அவனது உடல் முழுதும் மனம்போலக் குளிர்ந்தது; அவ்வகத்தை மிக்குப் பொங்கிய உவகை என்ன - அந்த மனத்தில் நிறைந்து பொங்கிய மகிழ்ச்சியைப் போல; உரோமப்புள்ளி பொடித்தன - மயிர்க்கூச்செறிந்தன.
மகிழ்ச்சியால் மனம் குளிர்ந்தது போல உடலும் குளிர்ந்தது என்பதும் உள்ளத்தே எழுந்த உவகையை உரோம புளகாங்கிதத்தால் உடல் வெளிப்படுத்தியது என்பதும் தண்ணீர் வழிந்தது என்பதும் உவகை மெய்ப்பாடுகளாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even before the words spoken by that lion among men had entered his ears,
- the eyes of the one dark as night poured streams like rain;
- his limbs grew cool, just as his mind did; and, like that joy
- swelling to overflow his heart, the hairs of his body stood up in points.
What the poem says
Vīṭaṇaṉ's response comes before Cukkirīvaṉ has even finished speaking. Tears of joy stream from his eyes, his body grows cool and calm like his relieved mind, and his hair stands on end.
The commentary lists these as the classic bodily signs of joy in Tamil poetics: tears, a cooling of the body, and horripilation that makes inner delight visible.