கம்பராமாயணம் 6530 · யுத்த 4.124

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பஞ்சு எனச் சிவக்கும் - தோழியர் செம்பஞ்சு ஊட்ட வேணும் என்று சொன்னவுடன் பொறாமல் சிவக்கின்ற; மென்கால் தேவியை - மென்மையான பாதங்களை உடைய சீதாதேவியை; பிரித்த பாவி வஞ்சனுக்கு - இராமபிரானிடமிருந்து பிரியச் செய்த பாவியும், வஞ்சகனுமான இராவணனுக்கு; இளைய என்னை - இளைய தம்பியாகிய என்னை; வருக என்றுஅருள் செய்தானோ - வருவானாக எனக்கூறி அருள்புரிந்தானோ; தஞ்சு எனக் கருதினானோ - என்னையும் அடைக்கலம் என்று கருதினானோ; நாயகன் அருளின் நாயேன் - அடியவனாகிய நான் பெருமானுடைய திருவருளால்; தாழ்சடைக் கடவுள் உண்ட - தாழ்ந்த சடையை உடைய கடவுளான சிவபெருமான் அன்று உண்ட; நஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ - நஞ்சு எவ்வாறு சிவன் உண்டதால் சிறந்ததாயிற்றோ அதுபோல நானும் சிறந்தேன் அன்றோ.

சீதாபிராட்டியின் மென்மையான பாதங்களைச் சிறப்பித்து "பஞ்சு என சிவக்கும் மென்கால்தேவி” என்றான். அனுக்கிரக தேவதை என்பதால் திருவடியை நினைத்தான் போலும். இணைபிரியாத தெய்வீக தம்பதிகளான இராமனையும், சீதையையும் சேர்ந்து வாழ விடாதபடி பிரித்த பாவச் செயலின் கொடுமை தோன்ற "பாவி வஞ்சன்" என்றார். அருள் செய்வானோ தஞ்செனக் கருதுவானோ என்றெல்லாம் திரிகின்ற உள்ளத்தனாகிய வீடணன் "உன்பால் அபயம் வழங்கினன்” எனக் கேட்டு மகிழ்ச்சி தோன்ற 'வருக என்று அருள் செய்தானோ தஞ்சு எனக் கருதினானோ' என வியந்துரைத்தான் என்க. நஞ்சாயினும் சிவபிரான் உண்டதால், நிலையான வாழ்வு பெற்றுச் சிறந்து விளங்குதல் போல, அரக்கனாகிய நானும் நாயகன் அருளால் சிறந்தேன் என மகிழ்ந்து கூறினான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The goddess whose soft feet redden at the very mention of cotton dye —
  2. to me, younger brother of the sinful deceiver who parted her from him, has he graciously said 'Come'?
  3. Has he thought of me as one to shelter? Have I not become, by the Lord's grace,
  4. lowly cur that I am, as exalted as the poison drunk by the god of the hanging matted locks?"

What the poem says

Vīṭaṇaṉ marvels at his good fortune. Cītai's feet are so tender that they redden merely at the mention of the red cotton-dye her maids apply. Yet Irāmaṉ has welcomed the brother of the villain who tore her from him.

He compares himself to the poison that rose from the churned ocean. In itself it was deadly, but because Śiva drank it, it gained a glorious, lasting place in his throat. In the same way, a mere rākṣasa has been exalted by the Lord's grace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"pañcu" eṉac civakkum meṉ kāl tēviyaip piritta pāvi
vañcaṉukku iḷaiya eṉṉai, "varuka!" eṉṟu aruḷ ceytāṉō?
tañcu eṉak karutiṉāṉō? tāḻ caṭaik kaṭavuḷ uṇṭa
nañcu eṉac ciṟantēṉ aṉṟō, nāyakaṉ aruḷiṉ nāyēṉ?