கம்பராமாயணம் 6531 · யுத்த 4.125
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மருள் உறு மனத்தினான் - காம மயக்கத்தை உடைய மனத்தினனான இராவணன்; என் வாய்மொழி மறுத்தான் - எனது வாய்மொழியை மறுத்துவிட்டான். வானத்து உருள் உறு தேரினானும் - வானவீதியிலே ஒற்றையாழித் தேரை உடையவனாகிய சூரியனும், இலங்கை மீது ஓடுமன்றே - இனி இலங்கை மீது செல்வானல்லவா? தெருள் உறு சிந்தை வந்த - இராமபிரானுடைய தெளிந்த மனத்தில் இருந்து வந்த; தேற்றம் ஈதாகின் - உறுதியான எண்ணம் இதுவானால்; செய்யும் அருள் இதுவாயின் - எனக்குச் செய்யும் அருள் இதுவானால்; அரக்கர் ஆனோர் பிழைப்பரோ - அரக்கர்கள் பிழைப்பார்களா? கெட்டேன் - நான் கெட்டேன்.
உருள் உறுதேர் சூரியனது ஒற்றை யாழித்தேர். கெட்டேன் - அரக்கரது பேரழிவைப் புலப்படுத்தும் இரக்கக் குறிப்புச் சொல். சீதாபிராட்டியைத் தவறான நோக்கத்தால், வஞ்சகமாகக் கவர்ந்து சென்று சிறை வைத்தமையால் இராவணனை மருள் உறுமனத்தினான்" என்றான். இராவணனது ஆணைக்கு அஞ்சி, இதுவரை ஒதுங்கிச் சென்ற சூரியன் இனிமேல் இலங்கைமீது நேராகச் செல்ல நேரும் என்பான். "உருளுறுதேரினானும் இலங்கை மீதோடு மன்றே" என்றான். இராமபிரானுடைய தெளிந்த மனத்தே தோன்றிய உறுதியான எண்ணம் எனக்குப் புகல் தந்து காப்பது என்ற இதுவானால் என்பான். "தெருள் உறு சிந்தை வந்த தேற்றம் ஈதாயின்” என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "He of the deluded mind rejected the words of my mouth; now
- will not even the one whose wheeled chariot rolls through the sky drive straight over Ilaṅkai?
- If this is the resolve that has come from that clear mind,
- if this is the grace he shows — alas! Will those born rākṣasas survive?"
What the poem says
Vīṭaṇaṉ's joy turns to pity for his own people. Irāvaṇaṉ, blinded by lust, ignored his warnings.
The Sun, who till now feared Irāvaṇaṉ and steered his one-wheeled chariot around Ilaṅkai, will soon ride straight over it, since Irāvaṇaṉ's power is ending. If Irāmaṉ's grace extends even to a rākṣasa like Vīṭaṇaṉ, it means his purpose is firm and Ilaṅkai's doom is sealed. "Alas!" is a cry of grief for his kin.