கம்பராமாயணம் 6532 · யுத்த 4.126
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செய்ய சிந்தைப் பேரருளாளர் - செம்மையான மனத்தையுடைய, மேன்மையான அருளாளர்கள்; தீர்வு அரும் இன்னல் தம்மைச் செய்யினும் - தமக்குத் தீராத இன்னல்களைப் பிறர் செய்தாலும்; தம்தம் செய்கையின் பிழைப்பதுண்டோ - தமக்கே உரிய நல்ல செய்கையிலிருந்து மாறுபடுவார்களோ; கார்வரை நிறுவி - கருமையான பெரிய (மந்தர மலையை மத்தாக நாட்டி; தன்னைக் கனல் எழக் கலக்கக் கண்டும் - (பாற்கடல்) தன்னை நெருப்பு எழும்படி தேவாசுரர்கள் கலக்குவதைப் பார்த்தும்; ஆர்கலி அமரர் உய்ய - பாற்கடலானது தேவர்கள் உய்யுமாறு; அமுது பண்டு அளித்ததன்றே - தேவாமுதத்தை முன்பு கொடுத்ததல்லவா?
தீர்வரும் - தீர்க்கமுடியாத. கார்வரை - கரியமலை (மந்தரமலை. 'செய்ய சிந்தைப் பேரருளாளர்' என்றது இராமனைப் போன்றவர்களைச் சுட்டி நின்றது. தீர்த்தற்கரிய துன்பத்தைப் பிறர் செய்தாலும் அருளாளர்கள் தங்கள் செய்கையில் பிழையார். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்வர் என்பதால் 'செய்கையின் பிழைப்பதுண்டோ' என்றான். பாற்கடல் வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி கனல் எழக் கடைந்த போதும், கடைந்த தேவர்கள் உய்வு பெற இராவணன் தம்பி என்றாலும் அடைக்கலம் தந்து காக்க முன்வந்தான் எனப் பாற்கடலுக்கு இராமனை உவமையாக்கிக் கூறினானென்க. இது எடுத்துக்காட்டுவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even if others do them harm beyond remedy, will the greatly gracious,
- those of upright mind, ever stray from their own way of acting?
- Even when it saw a dark mountain planted in it and itself churned until fire rose,
- did not the roaring sea of old give nectar so that the gods might live?
What the poem says
Vīṭaṇaṉ reflects on the nature of the truly gracious. Even when wronged beyond repair, they do not abandon their kindness.
He gives the example of the Ocean of Milk. Though the gods set Mount Mantara in it as a churning-rod and churned it until fire blazed, it still gave them the nectar of immortality. So too Irāmaṉ, deeply wronged by Irāvaṇaṉ, still shelters Irāvaṇaṉ's brother.