கம்பராமாயணம் 6533 · யுத்த 4.127
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
துறவியின் உறவுபூண்ட - துறவறத்தைத் தமக்குரிய அறமாக ஏற்றுக்கொண்ட; தூயவர் துணைவன் - தூயமுனிவர்களின் துணைவனான ராமன்; என்னை உறவு உவந்தருளி - என்னை உறவாக மிகவும் உவந்தருளி; மீளா அடைக்கலம் உதவினானே - எனக்கு மீளாத அடைக்கலத்தைக் கொடுத்துதவினான்; அறவினை இறையுமில்லா - சிறிதும் அறச்செயல்களைச் செய்யாத; அறிவு இலா - நல்லறிவும் இல்லாத; அரக்கன் என்னும் பிறவியின் - அரக்கர் என்னும் பிறவியில் இருந்து; பெயர்ந்தேன் - பெயர்ந்து, உயர் பிறவியனானேன்; பின்னும் நரகினின் பிழைப்பதானேன் - மேலும் நரகத்தை அடைவதிலிருந்தும் தப்பிவிட்டேன்.
துறவி - துறவு. துறவியின் உறவு பூண்ட தூயவர் துணைவன். இராமபிரான் "மாமுனிவர்க்குறவாகி வனத்திடையே வாழும் கோ” (2325) என்று முன்னும் கூறுதல் காண்க. இராமபிரான் எனக்கு அடைக்கலம் தருதலால் அசுரப்பிறப்பிலிருந்து பெயர்ந்து அமரனானேன் என்பான். அரக்கன் என்னும் பிறவியின் பெயர்ந்தேன். என்றான். இராமபிரானைச் சரண்புகுந்த நான் நரகத்தொல்லையிலிருந்தும் தப்பியவனாவேன் என்பான் 'நரகினில் பிழைப்பதானேன்' என்றான். இறையும் - சிறிதும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The companion of the pure, who have taken renunciation as their kin,
- has gladly accepted me as kin and granted me a refuge that will never be withdrawn;
- so I have left behind my birth as a rākṣasa, without the least
- righteous deed, without wisdom; and I have escaped hell besides."
What the poem says
Vīṭaṇaṉ feels transformed. Irāmaṉ, friend of the ascetic sages, has welcomed him as kin and given him a protection that will never be revoked.
Through that grace, Vīṭaṇaṉ feels he has shed his rākṣasa birth, with its lack of virtue and wisdom, and has been saved from the hell that awaited him. Taking refuge in Irāmaṉ is, for him, a spiritual rebirth.