கம்பராமாயணம் 6534 · யுத்த 4.128

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திருத்திய உணர்வின் மிக்க - (இராமபிரானது சொற்களால்) திருந்திய நல்லுணர்வு மிகுந்தவனாகிய; செங்கதிர்ச் செல்வன் செம்மல் - சிவந்த கிரணங்களை உடைய சூரிய குமாரனாகிய சுக்கிரீவன்; ஒருத்தரை நலனும் தீங்கும் தேரினும் - (வீடணனை நோக்கி) இராமன் ஒருவரை நன்மை, தீமைகளை ஆய்ந்தறியினும்; தன்னைக் கழல் அடைந்தோரை உயிரின் ஓம்பும்கருத்தினன் - தன்னைச்சரண் அடைந்தோரை உயிரினும் சிறந்தோராகக் கருதிப் பேணும் கருத்துடையவன் அல்லவா? காணும் அருத்தியன் அமலன் - உன்னைக்காணும் விருப்பம் உடையவன் அந்தக் குற்றமற்ற பெருமான் (ஆதலால்); அறிஞ! தாழாது ஏகுதி என்றான் - அறிவு மிக்கவனே! காலம் தாழ்த்தாது அவனிடம் செல்வாயாக என்றான்.

முன்பு வீடணனை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறியவன் சுக்கிரீவன் இராமபிரானது நல்லுரை கேட்டுத் திருந்திய நல்லுணர்வுடையவனானான் என்பதால் 'திருத்திய உணர்வின் மிக்க' என்றார். ஒருவர் செய்யும் நன்மை, தீமைகள் ஆய்ந்தறியும் இயல்புடைய இராமபிரான் தீமையே புரிபவனானாலும் தன்னைச் சரணடைந்தோரை உயிரினும் மேலாகக் கருதி ஆதரிக்கும் பண்புடையவன் என்பதை 'கழல் அடைந்தோரை உயிரின் ஓம்பும் கருத்தினன்' என்றார். உயிரின் - உயிரைவிட. 'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என்ற குறளில் (131) இப்பொருள் வந்தது காண்க. அருத்தி - விருப்பம். தாழாது - காலம்தாழ்த்தாமல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The son of the red-rayed Sun, his understanding now corrected and full,
  2. said: "Though he weighs the good and the evil in a person, is he not
  3. one minded to guard, more than his own life, those who have reached his feet?
  4. The Spotless One longs to see you; go without delay, O wise one!"

What the poem says

Cukkirīvaṉ, who had first argued against Vīṭaṇaṉ, now speaks with a mind set right by Irāmaṉ's words.

He tells Vīṭaṇaṉ that although Irāmaṉ can tell good from evil, he cherishes those who take refuge at his feet more than his own life, whatever they may have done. Irāmaṉ is eager to see him, so he must go at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiruttiya uṇarvu mikka ceṅ katirc celvaṉ cemmal,
'oruttarai nalaṉum tīṅkum tēriṉum, uyiriṉ ōmpum
karuttiṉaṉ aṉṟē, taṉṉaik kaḻal aṭaintōrai; kāṇum
aruttiyaṉ, amalaṉ; tāḻātu ēkuti aṟiña! eṉṟāṉ.