கம்பராமாயணம் 6535 · யுத்த 4.129

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மொய்தவழ் கிரிகள் மற்றும் பலவுடன் முடுகிச் செல்ல,
மை தவழ் கிரியும் மேருக் குன்றமும் வருவது என்ன,
செய்தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய
எய்தவன் இருந்த சூழல், இருவரும் எய்தச் சென்றார்.

பொருள் · Meaning in Tamil

மொய் தவழ் கிரிகள் - வலிமை பொருந்திய மலைகள்; மற்றும் பலவுடன் முடுகிச் செல்ல - வேறுபலவும் தம்மைப்பின் தொடர்ந்து விரைந்து செல்ல; மைதவழ் கிரியும் - மேகங்கள் தங்கிய பெரியதொரு மலையும்; மேருக்குன்றமும் - பொன்னிறமான மேருமலையும்; வருவதென்ன - சேர்ந்து வருவது போல; செய்தவம் பயந்த வீரர் - தாங்கள் செய்த தவத்தால் (இராமனைச் சரணடையும்) பயனைப் பெற்ற வீரர்களான வீடணனும், சுக்கிரீவனும்; திரள் மரம் ஏழும் தீய எய்தவன் - திரண்டு நின்ற மராமரங்கள் ஏழும் தீய்ந்து போகும்படி அம்பெய்தவனான இராமபிரான்; இருந்த சூழல் இருவரும் எய்தச் சென்றார் - இருந்த இடத்துக்கு அந்த இருவரும் விரைந்து சென்றனர்.

மொய் - வலிமை. தவழ் - பொருந்திய. மைதவழ்கிரி - வீடணனுக்குவமை. மேருக்குன்றம் - சுக்கிரீவனுக்குவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With many other mighty mountains hastening along with them,
  2. as if a cloud-wrapped dark mountain and Mount Mēru were coming together,
  3. the two heroes, whose past penance had borne fruit, went on till they reached
  4. the place where he sat who had shot through and scorched the seven massed trees.

What the poem says

Vīṭaṇaṉ and Cukkirīvaṉ walk to Irāmaṉ, followed by a crowd of monkey warriors as big as hills. The two of them look like a dark, cloud-covered mountain (Vīṭaṇaṉ) moving beside golden Mount Mēru (Cukkirīvaṉ).

Irāmaṉ is recalled through an earlier feat: to prove his strength to Cukkirīvaṉ, he pierced seven great sal trees in a row with one arrow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1moy tavaḻ kirikaḷ maṟṟum palavuṭaṉ muṭukac cella,
mai tavaḻ kiriyum mēruk kuṉṟamum varuvatu eṉṉa,
cey tavam payanta vīrar tiraḷ maram ēḻum tīya
eytavaṉ irunta cūḻal, iruvarum eytac ceṉṟār.