கம்பராமாயணம் 6545 · யுத்த 4.139
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அழிந்தது பிறவி என்னும் - அரக்கப் பிறவி அழிந்தது என்று (வீடணன் நினைந்த); அகத்தியல் முகத்துக் காட்ட - மனத்தின் இயல்பினை முகம் காட்ட; வழிந்த கண்ணீரின் - கண்களில் பெருகிய கண்ணீரோடு; மண்ணில் மார்புற வணங்கினானை - தரையிலே மார்பு பொருந்த வணங்கிய வீடணனை; பொழிந்ததோர் கருணை தன்னால் - பெருகியதொரு கருணையாலே; புல்லினன் என்று தோன்ற - தழுவினான் என்று தோன்றுமாறு (அருளோடு பார்த்து); எழுந்து இனிது இருத்தி என்னா - எழுந்திருந்து, இனிதே அமர்வாயாக என்று; மலர்க்கையால் இருக்கை ஈந்தான் - தனது மலர் போன்ற கைகளாலே அவனுக்கு இருப்பிடம் தந்தான்.
இராமபிரானது தாளிணையில் வீழ்ந்த வீடணன் 'அரக்கப் பிறவி அழிந்தது' என நினைந்த அவனது மனத்தின் தன்மையை முகம் காட்டித்தர, கண்களில் பெருகிய கண்ணீரோடு, தரையிலே மார்பு படும்படி வணங்க, அவ்வாறு வணங்கிய வீடணனை கருணை பொங்கப் பார்த்த இராமன் தழுவினான் என்று தோன்றுமாறு எழுந்து இங்கு இனிதே இருப்பாயாக என்று கூறித் தனது மலர் போன்ற கையால் இருப்பிடம் காட்டினான். "அடுத்ததுகாட்டும் பளிங்கு போல் நெஞ்சங் கடுத்தது காட்டும் முகம்” (குறள் 706) என்ற குறளுரைக்கேற்ப 'அகத்தியல் முகத்துக்காட்ட' என்றது கருதத்தக்கது. 'பிறவி நோய்க்கு மருந்தென நின்றான்' என்று முன்பே நினைந்ததற்கேற்ப 'அழிந்தது பிறவி' எனக் கருதிக் கூறப்பட்டது பொருந்தும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As his face showed the inner feeling, "My birth is destroyed,"
- him who bowed with his chest to the ground, amid streaming tears,
- so that it seemed he had embraced him in an outpouring of compassion,
- he rose, said "Sit here at ease," and with his flower-like hand gave him a seat.
What the poem says
Vīṭaṇaṉ lies with his chest on the earth, weeping; his face shows his conviction that his cycle of rebirth has ended.
Irāmaṉ looks at him with such overflowing compassion that it is as if he has embraced him. He rises, bids Vīṭaṇaṉ sit comfortably, and with his lotus hand shows him a seat beside him. The commentary again cites the Kuṟaḷ that the face, like crystal, shows the heart.