கம்பராமாயணம் 6544 · யுத்த 4.138
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கரங்கள் மீச்சுமந்து செல்லும் கதிர்மணிமுடியன் - இவ்வாறு எண்ணிய வீடணன் இருகைகளையும் உச்சி மீது சுமந்து செல்லும் ஒளிவீசும் முடியை உடையவனாய்; கல்லும் மரங்களும் உருக நோக்கும் காதலன் - கல்லும் மரங்களும் கூட உருகும் படி பார்க்கின்ற அன்புடையவனாய்; கருணை வள்ளல் - அருள் மிகுந்த வள்ளலாகிய இராமபிரான்; இரங்கினன் நோக்கும் தோறும் - இரக்கம் கொண்டு பார்க்கும் போதெல்லாம்; இருநிலத்து இறைஞ்சுகின்றான் - நிலத்திலே வீழ்ந்து வணங்குபவனாய்; வரங்களின் வாரியன்ன - அடியார்க்கு வேண்டும் வரம் வழங்கும் கடல் போன்றவனான இராமபிரானது, தாளிணை வந்து வீழ்ந்தான் - திருவடிகளில் வந்து வீழ்ந்தான்.
மீ - மேலே. வீடணன் எல்லையற்ற அன்புடையவன் என்பதால் 'கல்லும் மரங்களும் உருக நோக்கும் காதலன்' என்றார். 'தாவர சங்கமம் என்னும் தன்மைய யாவையும் இரங்கிடக் கங்கை எய்தினான்” என பரதனுடைய அன்பு நிலையை முன்பும் கூறுவது (கம்ப. 303) நினைவு கூரத்தக்கது. இராமபிரான் இரங்கிப் பார்க்கும்தோறும் தரையிலே வீழ்ந்து வணங்கிய வீடணனது நிலை அடிமைத்திறத்தை விளக்கிற்று.
வேண்ட முழுதும் தரும் வரங்களின் கடலாக விளங்கும் திருவடிகளை 'வரங்களின் வாரியன்ன தாளிணை' என்றார். தாளிணை - இரண்டு திருவடிகள். 'நின்னில் சிறந்த நின்தாளிணை' என்ற பரிபாடல் ஒப்பு நோக்கத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He whose bright jewelled crown was borne up by the hands joined over it as he went,
- a lover whose gaze could melt even stones and trees,
- each time the generous Lord of compassion looked on him with pity, bowed down to the wide earth,
- and came and fell at the two feet that are like an ocean of boons.
What the poem says
Vīṭaṇaṉ approaches with his hands joined above his crown. His devotion is so intense that, the poet says, his look could melt stones and trees. The commentary notes that the same was said of Paratan's love when he came to find Irāmaṉ.
Every time Irāmaṉ looks at him kindly, Vīṭaṇaṉ prostrates again, until he reaches and falls at Irāmaṉ's feet, which grant every boon a devotee could wish.