கம்பராமாயணம் 6543 · யுத்த 4.137

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பெருந்தவம் இயற்றினோர்க்கும் பேர்வு அரும் பிறவி நோய்க்கு
மருந்து என நின்றான் தானே வடிக்கணை தொடுத்துக் கொல்வான்
இருந்தனன்; என்ற போது என் இயம்புவது? எல்லை தீர்ந்த
அருந்தவம் உடையர் அம்மா அரக்கர்!' என்று அகத்துள் கொண்டான்.

பொருள் · Meaning in Tamil

பெருந்தவம் இயற்றினோர்க்கும் - மிகப் பெரிய தவத்தைச் செய்த மேலோர்களுக்கும்; பேர்வு அரும் பிறவி நோய்க்கு - போக்க முடியாத பிறவியாகிய நோயைப் போக்கும்; மருந்து என நின்றான் - அரிய மருந்து என்னும்படி நின்ற இராமபிரான்; தானே வடிக்கணை தொடுத்து - தானே கூர்மையான அம்புகளைத் தனது வில்லில் பூட்டி; கொல்வான் இருந்தனன் - அரக்கர்களை யெல்லாம் கொல்ல இருந்தான்; நின்றது என் நாம் இயம்புவது? - அவ்வாறு போரிடச் சித்தமாக நின்ற செயல்பற்றி நாம் என்ன கூற இருக்கிறது? அரக்கர் எல்லை தீர்ந்த அருந்தவம் உடையர் - இராமபிரானால் கொல்லப்பட இருக்கும் அரக்கர்கள் எல்லோரும் அளவற்ற சிறந்த தவத்தைச் செய்தவராவார்; என்று அகத்துட்கொண்டான் - என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டான்.

இராமபிரானை, வீடணன் பார்த்ததும் இவன் பிறவி நோயைப் போக்கும் பெருமான் என்பதால் இவனால் அழியும் அரக்கர் அரிய தவம் செய்தவராவார் என எண்ணினான் என்பது கருத்து. பிறவிப் பெருங்கடல் என்பார் (குறள் 10) வள்ளுவர். போக்கமுடியாததொன்று என்பதால் 'பெருந்தவம் இயற்றினோர்க்கும் பேர்வரும் பிறவி' என்றான். இறைவனடி சேர்ந்தவர்களே பிறவிக் கடலை நீந்துவாராதலின் இராமபிரான் 'பிறவி நோய்க்கு மருந்தென நின்றான்' என்றான். 'ஆச்ரித விரோதிகளைத் தானே தனது கைப்படக் கொன்று தீர்க்கும்' விரதமுடையவன் என்பதால் 'தானே வடிக்கணை தொடுத்துக் கொல்வான் இருந்தனன்' என்றான். எனவே அரக்கர்கள் பெருந்தவம் செய்தோராவார் என்பதை 'அரக்கர் எல்லை தீர்ந்த அருந்தவம் உடையர் என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "He who stands as the medicine for the disease of birth, hard to remove
  2. even for those who have performed great penance, is here himself, ready to fit sharp arrows
  3. and slay them; what more is there for us to say? Ah, the rākṣasas
  4. possess a penance that knows no bounds!" — so he thought within himself.

What the poem says

Vīṭaṇaṉ reflects on the strange fortune of his own people. Irāmaṉ is the cure for rebirth, the one remedy that even great ascetics struggle to obtain.

That this very Lord should personally take up his bow to kill the rākṣasas means they will die at God's hands and so be released. They must have done boundless penance in past lives to earn such a death. The commentary recalls the Tirukkuṟaḷ's "great sea of births", which only those who reach God's feet can cross.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'perun tavam iyaṟṟiṉōrkkum pērvu arum piṟavi nōykku
maruntu eṉa niṉṟāṉ tāṉē vaṭik kaṇai toṭuttuk kolvāṉ
iruntaṉaṉ; niṉṟatu eṉṉām iyampuvatu? ellai tīrnta
arun tavam uṭaiyar ammā arakkar!' eṉṟu akattuḷ koṇṭāṉ.