கம்பராமாயணம் 6542 · யுத்த 4.136
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மின்மினி ஒளியின் மாயும் - மின்மினிப் பூச்சியின் ஒளியைப் போலத் தோன்றி மறையும்படியான; பிறவியை வேரின் வாங்க - பிறவி நோயை அடியோடு நான் போக்கிக் கொள்ளவே; செம்மணி மகுடம் நீக்கி - சிவந்த மணிகள் பதித்த மணி மகுடத்தைத் துறந்து; திருவடி புனைந்த செல்வன் தம்முனார் - இவனது திருவடிகளைச் சிரத்தில் சூடிக்கொண்ட செல்வத்தை எய்திய பரதனுக்கு முன்னோனான இராமன்; கமலத்து அண்ணல் தாதையார் - தாமரை மலரில் வாழும் பிரமதேவனுக்கும் தந்தையான இராமபிரானுடைய; சரணம் தாழ - திருவடிகளில் வீழ்ந்து நான் வணங்குமாறு; எம்முனார் எனக்குச் செய்த உதவி - என் முன்னவனாகிய இராவணன் எனக்குச் செய்த உதவி இதுவாகும்; என்று ஏம்பலுற்றான் - என்று கூறி மகிழ்ச்சியுற்றான்.
மின்மினிப் பூச்சியின் ஒளி தோன்றிய உடனே மறையும் தன்மை உடையது. 'பிறவி' என்பதும் இதுபோலத்தான் என்பான். 'மின்மினி ஒளியின் மாயும் பிறவி' என்றான். இராமபிரான் திருமாலின் அவதாரமாதலின் அவன் சரணம் தாழ, பிறவி நோய் அடியோடு தீரும் என்பான். 'பிறவியை வேரின் வாங்க' என்றான். தாதை உதவிய தரணிதன்னைத் தீவினை என்ன நீத்து வந்தவன் பரதன் என்பதால் 'மகுடம் நீக்கி திருவடி புனைந்த செல்வன்” எனப் பரதனைச் சிறப்பித்தான். 'செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே” என்பார் மேலோர். இராமபிரான் திருவடிகளைச் சிரத்தில் சூடி, மேலான செல்வம் எய்திய பரதனை. 'செல்வன்' என்றது குறிப்பிடத்தக்கதாகும். பிறவித் துன்பம் அடியோடு நீங்க, இராமபிரான் திருவடிகளை நான் சேரச் செய்த என் முன்னோன் எனக்குப் பேருதவி செய்தான் என்று கூறி மகிழ்ந்தவன், 'எம்முனார் எனக்குச் செய்த உதவி' என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "So that I may pull out by the root this birth that fades like a firefly's glow,
- to bow at the feet of the elder brother of that blessed one who set aside the red-jewelled crown
- and wore his sandals instead, the father of the lotus-born lord —
- this is the help my elder brother has done me," he said, rejoicing.
What the poem says
Vīṭaṇaṉ sees a strange blessing in his brother's rejection. Life in this world flickers out like a firefly's light; by driving him away, Irāvaṇaṉ has led him to the feet of Irāmaṉ, which cut the cycle of rebirth at its root.
Irāmaṉ is described through Paratan, who refused the crown and instead set Irāmaṉ's sandals on his head as his true wealth, and as the father of Brahmā, since Brahmā rose from the lotus of Viṣṇu's navel.