கம்பராமாயணம் 6541 · யுத்த 4.135
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீரனை நோக்கி - மாவீரனான இராமபிரானை (வீடணன் பார்த்து; அங்கம் மென் மயிர் சிலிர்ப்ப - உடல் முழுதும் ரோமம் புளகமெய்த; கண்ணீர் வார - கண்களில் கண்ணீர் பெருக; நெஞ்சு உருக - உள்ளம் உருகி; செங்கண் அஞ்சனமலை அன்று ஆகின் - அழகிய கண்களை உடைய இவன் அஞ்சன மலை போன்றவன் அதுவல்ல என்றால்; கார்முகில் கமலம் பூத்தது அன்று - கருமை நிற மேகம் கமலம் பூத்தது போன்றவன். அதுவுமல்ல எனின்; இவன் கண்ணன் கொல்லாம் - இத்தன்மை உடைய இவன் திருமால் தானோ; ஆர் அருள் சுரக்கும் - நிறைந்த அருளைப் பொழியும்; நீதி அற நிறம் - நீதியை உடைய அறக்கடவுளின் நிறம்; கரிதோ என்றான் - கருமை நிறமோ என வியந்துரைத்தான்.
இராமபிரானைத் தரிசித்த மகிழ்ச்சியால் வீடணன் உடல் ரோம புளகாங்கிதம் எய்தினான் என்பதை அங்கம் மென் மயிர் சிலிர்த்து' என்றார். மகிழ்ச்சி மிகுதியால் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான் என்பதனை, "கண்ணீர் வார” என்றார். வார - பெருக. அழகான கண்களை உடைய அஞ்சனமலையோ என இராமனை நோக்கி வியந்து - அல்ல என்றான், நீலமேக மொன்று - தாமரை பூத்ததோ, அதுவுமல்ல. இவன் திருமாலேதான். நிறைந்த அருள் பொழியும் நீதியை உடைய தரும தேவதையின் நிறம் கருமையோ? என்று வியந்துரைத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he gazed at the hero, the soft hair of his body bristled, tears
- streamed down, his heart melted: "A mountain of collyrium with red eyes? If not that,
- a dark rain-cloud that has blossomed into lotuses? No — surely this is Kaṇṇaṉ himself;
- or is the colour of Dharma, which pours out abundant grace, dark?" he said.
What the poem says
Vīṭaṇaṉ, overwhelmed, trembles and weeps as he looks at Irāmaṉ, and searches for a comparison. A black mountain with red eyes? A dark cloud flowering with lotuses?
He rejects each, deciding this must be Kaṇṇaṉ, Viṣṇu himself. Finally he wonders whether righteousness, so full of grace, has taken a dark-hued body.