கம்பராமாயணம் 6540 · யுத்த 4.134

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கற்றை வெண் நிலவு நீக்கி - தொகுதியான நிலவொளியை நீக்கிவிட்டு; கருணையாம் அமிழ்தம் காலும் - கருணையாகிய அமுதைப் பொழிகின்ற; முற்றுறு கலையிற்றாய - நிறைந்த கலைகளை உடையதாகிய, முழுமதி முகத்தினானை - முழுமதியைப் போன்ற முகத்தை உடையவனை; பெற்றவன் அளித்த மோலி - தந்தையாகிய தயரதன் தந்த மணி மகுடத்தை; இளையவன் பெற - தம்பியாகிய பரதன் அடைய; தான் பெற்ற சிற்றவை பணித்த மோலி - தான் பெற்ற, தனது சிறிய தாயாராகிய கைகேயி கட்டளைப்படி அணிந்த சடைமுடி; பொலிகின்ற சென்னியானை - விளங்குகின்ற தலையை உடையவனை.

இராமனது முகம் முழுமதி போன்றது. ஆனால், மதிக்குரிய நிலவொளியை நீக்கி, கருணையாகிய அமுதத்தைப் பொழியும் முழுமதி போன்ற முகம் என்பது தோன்றக் 'கற்றை வெண்நிலவு நீக்கி, கருணையாம் அமுதம் காலும் முற்றுறு கலையிற்றாய முழுமதி முகம்' என்றார். இல்பொருள் உவமை. கருணைபொழிதல் மதியினுக்கில்லை. நிலவொளி இராமன் முகத்துக்கில்லை. முற்றுறு கலை - நிறைந்த கலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Him whose face was a full moon complete in all its digits,
  2. that sheds not clustered white moonlight but the nectar of compassion;
  3. him on whose head shone the crown his stepmother had bidden him wear,
  4. the matted locks he took so that his younger brother might have the crown his father gave —

What the poem says

Irāmaṉ's face is a full moon of a special kind: instead of white moonlight it pours out the nectar of compassion. The commentary calls this a simile with an imagined object, since no real moon sheds compassion.

His "crown" is his ascetic's matted hair. The jewelled crown his father Tacarataṉ meant for him went to his younger brother Paratan, while Irāmaṉ took on the hermit's locks at his stepmother Kaikēyi's command.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṟṟai veṇ nilavu nīkkik karuṇai ām amiḻtam kālum
muṟṟuṟu kalaiyiṟṟu āya muḻumati mukattiṉāṉai;
peṟṟavaṉ aḷitta mōli iḷaiyavaṉ peṟat tāṉ, peṟṟa
ciṟṟavai paṇitta mōli polikiṉṟa ceṉṉiyāṉai;