கம்பராமாயணம் 6539 · யுத்த 4.133
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பருவ வான்படர் மழை சுமந்த காலை - கார்காலத்து மேகம் படர்ந்த மழை நீரைச் சுமந்து வந்த போது; அமரர் கோமான் அடர் சிலை துறந்த தென்ன - இந்திரவில்லை நீக்கி நின்றது போல; ஆரம்தீர் மார்பினானை - மணியாரம் பூணாத மார்பை உடையவனை; கடல் கடை மத்தின் - பாற்கடலைக்கடைந்த மத்தான மந்தரமலையில் பொருந்திய; பாம்பு கழற்றியதென்ன - பாம்பாகிய வாசுகியைக் கழற்றியது என்று கூறும்படி, காசின் சுடர் ஒளிவலயம் - மணிகள் பதித்த மிகுந்த ஒளியை உடைய வாகுவலயம்; தீர்ந்த சுந்தரத் தோளினானை - நீங்கிய அழகிய தோள்களை உடையவனை.
பருவவான் - கார்காலத்து மேகம். பல நிறம்கொண்ட தென்பதால் 'அடர்சிலை' என்றார். இந்திரவில் நீங்கிய மேகம் போல, மணியாரம் நீங்கிய மார்பனாக இராமன் காணப்பட்டான். பாம்பாகிய தாம்பு நீங்கிய மலை போன்ற தோள்களில் வாகுவலயம் இல்லாதிருந்தான். வாகுவலயமில்லாத நிலையிலும் தோள்கள் அழகுறத் திகழ்ந்தன என்பதால், 'சுந்தரத் தோள்' என்றார். தேனுடைய மலர் மகள் திளைக்கும் மார்பினில், தானிடை விளங்கிய தகையின் ஆரம்தான், மீனொடு சுடர்விட விளங்கும் மேகத்து வானிடை வில்லென வயங்கித் தோன்றுமே. (கம்ப. /2/7) சுந்தரத் தோள் அணி வலயம் தொல்லை நாள் மந்தரம் சுற்றிய அரவைமானுமே. (கம்ப. /2/4) அணிந்த நிலையைக் கூறுவதும், அவையில்லாத நிலையை எடுத்துரைப்பதும் பொருந்துவதைக் காணலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Him whose chest was bare of necklaces, like the monsoon sky, heavy with spreading rain-clouds,
- that has let fall the dense-hued bow of the king of the gods;
- him of beautiful shoulders stripped of armlets blazing with gems,
- like the churning-mountain of the sea when the serpent has been unwound from it —
What the poem says
Irāmaṉ, living as a forest ascetic, wears no jewels. The poet turns their absence into beauty. His bare dark chest is like a rain-cloud from which the rainbow, Indra's bow, has faded.
His great shoulders without armlets are like Mount Mantara after the serpent Vāsuki, used as the churning-rope, has been uncoiled from it. The commentary notes that an earlier canto used the same images, rainbow and serpent, for the jewels he once wore as a prince.