கம்பராமாயணம் 6538 · யுத்த 4.132

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கோணுதற்கு அமைந்த கோலப் புருவம் போல் திரையுங் கூடப்,
பூணுதற்கு இனிய முத்தின் பொலி மணல் பரந்த வைப்பின்
காணுதற்கு அரிய நீள வெண்மையில் கருமை காட்டி,
வாள் நுதல் சீதை கண்ணின் மணி என வயங்கு வானை.

பொருள் · Meaning in Tamil

கோணுதற்கு அமைந்த - வளைவதற்கு உரியதாய்; கோலப் புருவம் போல் - சீதாபிராட்டியின் அழகிய புருவங்களைப்போல; திரையும் கூட - கடல் அலைகளும் பொருந்த; பூணுதற்கு இனிய முத்தின் - அணிவதற்குரிய அழகிய முத்துக்களைப் போல; பொலி மணல் பரந்த வைப்பில் - விளங்குகின்ற மணல் பரந்துள்ள இடத்திலே; காணுதற்கினிய நீள வெண்மையில் - பார்ப்பதற்கு இனிமையுறக் காணப்படும் நீளமான வெண்மையின் மத்தியில்; கருமை காட்டி - கருமை நிறத்தைக் காட்டி; வாணுதல் சீதை - ஒளிபொருந்திய நெற்றியை உடைய சீதாபிராட்டியின்; கண்ணின் மணி என - கண்ணின் கரு மணி போல; வயங்குவானை - விளங்குகின்றவனை.

கோணுதல் - வளைதல். புருவத்துக்கு அலை உவமை. முத்துக்கு மணல் உவமை. முத்துக்கள் பொலிந்த மணல் என்றுமாம். பரந்த மணல் வெளி. கண்ணின் வெண் விழிக்கு உவமை. இராமபிரான் கண்ணின் கருமணிக்கு உவமை. சீதாபிராட்டிக்கு இராமன் கண்மணி அனையான் என்பதைப் புலப்படுத்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the waves curving close by like a lovely brow made for arching,
  2. on a broad stretch of shore spread with sand as bright as pearls fit to wear,
  3. showing his darkness amid a long whiteness lovely to behold,
  4. him who shone like the pupil in the eye of bright-browed Cītai —

What the poem says

The poet builds a whole face out of the seashore where Irāmaṉ sits. The curving waves are like Cītai's arched eyebrow; the long white beach of pearl-like sand is the white of her eye; and dark Irāmaṉ in its midst is the black pupil.

The conceit says that Irāmaṉ is the apple of Cītai's eye, the one her gaze always rests on, even while they are apart.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōṇutaṟku amainta kōlam puruvampōl tiraiyum kūṭa,
pūṇutaṟku iṉiya muttiṉ poli maṇal paranta vaippil
kāṇutaṟku iṉiya nīḷa veṇmaiyil karumai kāṭṭi,
vāṇutal cītai kaṇṇiṉ maṇi eṉa vayaṅkuvāṉai.