கம்பராமாயணம் 6537 · யுத்த 4.131

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அள்ளி மீது உலகை வீசும் அரிக் குலச் சேனை நாப்பண்,
தெள்ளுதண் திரையிற்று ஆகிப் பிறிது ஒரு திறனும் சாரா
வெள்ளி வெண் கடலில் மேல் நாள் விண்ணவர் தொழுது வேண்டப்
பள்ளி தீர்ந்து இருந்தான் என்னப் பொலிதரு பண்பினானை;

பொருள் · Meaning in Tamil

அள்ளி மீது உலகை வீசும் - உலகத்தையே கைகளால் அள்ளி எடுத்து மேலே வீசும்படியான ஆற்றலை உடைய; அரிகுலச் சேனை நாப்பண் - வானரச் சேனைக்கு மத்தியிலே; தெள்ளு தண் திரையிற்றாகி - தெளிந்த, குளிர்ந்த அலைகளை உடையதாய்; பிறிது ஒருதிறனும் சாரா - வெண்மை நிறமன்றி வேறு எந்த நிறமும் சேராத; வெள்ளி வெண்கடலுள் - வெள்ளியைப் போல் ஒளிரும் வெண்மையான பாற்கடலிலே; மேல்நாள் விண்ணவர் தொழுது வேண்ட - முன்பொருநாள் தேவர்கள் எல்லாம் தொழுது வேண்டிக்கொள்ள; பள்ளி தீர்ந்து எழுந்தான் என்ன - உறக்கம் நீங்கி அவர்களுக்கு உதவுமாறு எழுந்திருந்த திருமாலைப் போல; பொலிதரு பண்பினானை - பொலிந்து விளங்கும் தன்மை உடையவனை.

வானரசேனையின் வலிமை தோன்ற அள்ளி மீது உலகை வீசும் அரிகுலச் சேனை' என்றார். விபவத்திலும், வியூகத்தைப் போன்றே இருந்தான் என்பது தோன்ற 'விண்ணவர் தொழுது வேண்டப் பள்ளி தீர்ந்து இருந்தான் என்னப் பொலிதரு பண்பினானை" என்றார். 'விபவத்துக்கு நாற்றங்கால் போலே வியூகம்' என்பர் ஆன்றோர். விபவம் - இராம, கிருஷ்ண அவதாரங்கள். வியூகம் - பாற்கடலில் பள்ளி கொண்டநிலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Him who, amid the army of the monkey race that could scoop up the world and fling it skyward,
  2. shone like the one who, in the silver-white sea of clear, cool waves
  3. touched by no other colour, long ago, when the gods worshipped and implored him,
  4. rose from his sleep and sat up —

What the poem says

The description of Irāmaṉ continues over several verses, all governing "Vīṭaṇaṉ saw". Amid monkeys strong enough to toss the world into the air, Irāmaṉ looks like Viṣṇu in the pure white Ocean of Milk, who once, at the gods' pleading, rose from his serpent bed to come to their aid.

The commentary explains that in his incarnation as Irāmaṉ he appeared just as in his cosmic form on the milk ocean, which is the source of his descents into the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḷḷi mītu ulakai vīcum arik kulac cēṉai nāppaṇ,
teḷḷu taṇ tiraiyiṟṟu āka piṟitu oru tiṟaṉum cārā
veḷḷi veṇ kaṭaluḷ mēlnāḷ viṇṇavar toḻutu vēṇṭa
paḷḷi tīrntu iruntāṉ eṉṉap politaru paṇpiṉāṉai;