கம்பராமாயணம் 6547 · யுத்த 4.141
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வார்த்தை அஃது உரைத்தலோடும் - இராமபிரான் (இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன்) என்ற அந்த வார்த்தைகளைச் சொன்னவுடன்; உலகிலுள்ள சராசரம் அனைத்தும் - உலகத்தில் வாழும் சரம் அசரம் ஆகிய எல்லாவிதமான உயிரினங்களும்; தனித்தனி வாழ்ந்தேம் என்ன ஆர்த்தன - ஒவ்வொன்றும் தனித்தனியே நாம் வாழ்வு பெற்றோம் என ஆர்ப்பரித்தன; தீர்த்தன் நல் அருளை நோக்கிச் செய்ததோ - இராமபிரானது திருவருளை எண்ணி மகிழ்ச்சி அடைந்ததாலோ; சிறப்புப் பெற்றான் - இராமபிரானைச் சரணடைந்து மேலான சிறப்பைப் பெற்ற வீடணனுடைய; கூர்த்த நல் அறத்தை நோக்கி - மிகுந்த நல்லறத்தை எண்ணிப் பார்த்து; குறித்ததோ யாது கொல்லோ - செய்ததோ யாதென அறியோம்.
தீர்த்தன் - இராமபிரான்; தான் தூயனாய் இருப்பதோடு, தன்னை அடைந்தாரையும் தூயராக்கவல்லவன் என்பது பொருள். சரம் - இயங்கியற்பொருள். அசரம் - நிலையியற் பொருள். இராமபிரானுடைய அருட்பண்பை நோக்கி உலகம் 'வாழ்ந்தேம்' என மகிழ்ந்தது என்பதா? அந்தத் திருவருளைப் பெற்று உயர்ந்து சிறந்த வீடணன் நிலைக்கு மகிழ்ந்தது என்பதா? எனவே, 'யாது கொல்லோ' என்ற ஐயப்பாட்டால் கூறினார். இவ்விரண்டுமே உலகத்தவர் மகிழ்ந்து ஆரவாரம் செய்ததற்குக் காரணம் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Was it done in view of the good grace of the Holy One? Or was it meant
- in view of the keen and noble virtue of the one so honoured? Which could it be?
- As soon as he spoke that word, each one separately crying "We are blessed!",
- all things in the world, moving and unmoving, raised a great shout — ah!
What the poem says
When Irāmaṉ grants Ilaṅkai to Vīṭaṇaṉ, all creation, moving and unmoving, cries out with joy, each crying "We are blessed!"
The poet asks why. Was it in admiration of Irāmaṉ's grace, or of the virtue of Vīṭaṇaṉ, who earned it? The commentary answers: both. Irāmaṉ is called "the Holy One" (tīrttaṉ), meaning one who is pure himself and purifies those who come to him.