கம்பராமாயணம் 6548 · யுத்த 4.142

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'உஞ்சனன் அடியனேன்'என்று ஊழ்முறை வணங்கி நின்ற
அஞ்சன மேனி யானை அழகனும் அருளின் நோக்கித்
'தஞ்ச நல் துணைவனான தவறு இலாப் புகழான் தன்னைத்
துஞ்சல் இல் நயனத்து ஐய! சூட்டுதி மகுடம்'என்றான்

பொருள் · Meaning in Tamil

உய்ஞ்சனென் அடியனேன் என்று - அடியேன் உய்ந்தேன் என்று கூறி; ஊழ்முறை வணங்கி நின்ற - தனது நல்லூழால் முறைப்படி வணங்கி நின்ற; அஞ்சன மேனியானை - மை போன்ற நிறத்தை உடைய வீடணனை; அழகனும் அருளின் நோக்க - பேரழகனாகிய இராமபிரானும் கருணையோடு பார்த்து; தஞ்ச நல்துணைவன் ஆன - நம்மை அடைக்கலம் அடைந்து நமக்கு நல்லதொரு துணைவனானவனும்; தவறு இலாப் புகழான் தன்னை - குற்றமற்ற புகழை உடையவனுமான இந்த வீடணனுக்கு; துஞ்சல் இல் நயனத்து ஐய - உறங்காத கண்களை உடையவனே! (இலக்குவனை அழைத்து) சூட்டுதி மகுடம் என்றான் - இலங்கைக்கு அரசனாதற்குரிய மணிமுடியை அணிவிப்பாயாக என்றான்.

'உய்ந்தனென்' என்பது எதுகை நோக்கி உய்ஞ்சனென் என வந்தது. ஊழ் - ஆகூழ். தஞ்சம் - அடைக்கலம். இராமபிரானுடன் கானகத்தில் வாழ்ந்த நாளெல்லாம் ப உறக்கமும் இல்லாதிருந்தவன் இலக்குவன் எனவே 'துஞ்சல் இல் நயனத்து ஐய' என இராமபிரான் அழைப்பானாயினான். இலக்குவனை முடி சூட்டப்பணித்தது ஏன்? எனில் வீடணனை ஏற்றுகொள்ளலாகாது எனக் கூறிய சுக்கிரீவன் முதலியோரைப் போல இலக்குவன் எதுவும் பேசவில்லை என்றாலும் அவனுக்கும் உடன்பாடில்லை என உணர்ந்த இராமபிரான், வீடணனை அழைத்துவர, சுக்கிரீவனை அனுப்பியது போல, அவனுக்கு முடிசூட்ட இலக்குவனைப் பணித்தான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the one with a body dark as collyrium stood, saying "I, your servant, am saved," bowing again and again in due order,
  2. the Beautiful One looked on him with grace and said,
  3. "This man of faultless fame, who has become our good companion through seeking refuge —
  4. O you of the eyes that never sleep, my lord, crown him."

What the poem says

Irāmaṉ asks Ilakkuvaṉ to crown Vīṭaṇaṉ king of Ilaṅkai. He addresses his brother as "you whose eyes never sleep", since Ilakkuvaṉ stayed awake guarding Irāmaṉ every night of the exile.

The commentary suggests a reason for choosing Ilakkuvaṉ. Though he had said nothing, he too may have been uneasy about Vīṭaṇaṉ; just as Irāmaṉ sent Cukkirīvaṉ to fetch him, he gives Ilakkuvaṉ the crowning so that every doubter takes part in welcoming him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uyñcaṉeṉ aṭiyaṉēṉ' eṉṟu ūḻmuṟai vaṇaṅki niṉṟa
añcaṉa mēṉiyāṉai aḻakaṉum aruḷiṉ nōkka
'tañca nal tuṇaivaṉ āṉa tavaṟu ilāp pukaḻāṉtaṉṉai
tuñcal il nayaṉattu aiya! cūṭṭuti makuṭam' eṉṟāṉ