கம்பராமாயணம் 6549 · யுத்த 4.143

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விளைவினை அறியும் வென்றி வீடணன், என்றும் வீயா
அளவு அறு பெருமைச் செல்வம் அளித்தனை ஆயின் ஐய!
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடன்மை தீர
இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி'என்றான்.

பொருள் · Meaning in Tamil

விளைவினை அறியும் மேன்மை வீடணன் - மேலே நிகழ இருக்கும் நல்லவிளைவுகளை முன்னாலேயே தெரிந்து கொள்ளும் மேன்மை உடையவனாகிய வீடணன் இராமபிரானை நோக்கி; ஐய என்றும் வீயா - ஐயனே! என்றும் அழியாததாகிய; அளவறு பெருமைச் செல்வம் அளித்தனை - அளவற்ற பெருமை மிக்க செல்வத்தை எனக்குத் தந்தாய்; ஆயின் - ஆனால்; களவியல் அரக்கன் பின்னே - களவுத்தன்மையுடைய அரக்கனாகிய இராவணனுக்கு தம்பியாக; தோன்றிய கடமை தீர - பிறந்த அந்தத் தொடர்பு தீரும்படி; இளையவற் கவித்தமோலி - உனது தம்பியான பரதனுக்கு நீ அணிவித்த திருவடி நிலைகளான மகுடத்தை, என்னையும் கவித்தி என்றான் - எனக்கும் அணிவிப்பாயாக என்றான்.

இலங்கை அரசை நாடி இங்கு வீடணன் வந்தவனல்லன். இராமன் திருவருளே வீடணன் வேண்டுவது என்பதால் இலங்கைச் செல்வத்தை எனக்கு அளித்தாய் என்று கூற மாட்டான். அளவற்ற, அழியாத பெரிய செல்வம் என வீடணன் குறிப்பிட்டது இராமனைச் சரணடைந்து அவன் திருவருளைப் பெற்றதே என்பதால் 'என்றும் வீயா அளவறு பெருமைச் செல்வம் அளித்தனை' என்றான். இலங்கைச் செல்வம் என்றும் வீயாததோ, அளவற்றதோ பெருமைக்குரியதோ அன்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Vīṭaṇaṉ, great in knowing what is to come, said: "If you have granted me
  2. wealth of boundless glory that never perishes, my lord,
  3. then, to free me from the bond of being born after that thieving rākṣasa,
  4. crown me too with the crown you placed on your younger brother."

What the poem says

Vīṭaṇaṉ's reply shows what he truly values. The "imperishable, boundless wealth" he thanks Irāmaṉ for is not Ilaṅkai, which is neither eternal nor limitless, but Irāmaṉ's grace.

The crown he asks for is the one Paratan wore: Irāmaṉ's sandals, which Paratan carried on his head and set on the throne. By being crowned with Irāmaṉ's feet, Vīṭaṇaṉ hopes to be freed from the stain of being the thieving Irāvaṇaṉ's brother.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viḷaiviṉai aṟiyum mēṉmai vīṭaṇaṉ, eṉṟum vīyā
aḷavu aṟu perumaic celvam aḷittaṉai āyiṉ aiya!
kaḷavu iyal arakkaṉ piṉṉē tōṉṟiya kaṭamai tīra
iḷaiyavaṟ kavitta mōli eṉṉaiyum kavitti' eṉṟāṉ.