கம்பராமாயணம் 6572 · யுத்த 5.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவ்வழி உணர்வு வந்து - அப்பொழுது, தன்னுணர்வு வரப்பெற்று; அயர்வு நீங்கினான் - மனத்துயர் நீங்கியவனான இராமபிரான்; செவ்வழி அறிஞனைக் கொணர்மின் சென்றென - நன்னெறி நின்று ஒழுகும் அறிஞனான வீடணனை அழைத்து வருக என வானர வீரர்களுக்குக் கட்டளை இட; இவ்வழி வருதி என்று இயம்ப - (சென்ற வானரவீரர்கள் வீடணனை அடைந்து) இராமபிரானிடம் வருக என்று கூற; வெவ்வழிவிலங்கி நல்நெறியை மேவினான் - தீய நெறியிலிருந்து நீங்கி, நல்லநெறியைக் கடைப் பிடிப்பவனாகிய வீடணன்; எய்தினான் - இராமபிரான் இருக்குமிடத்தை அடைந்தான்.
இராமபிரான் அனுமனுக்குச் 'சொல்லின் செல்வன் என்றொரு பெயர் சூட்டிய திருவாயால் வீடணனை "செவ்வழி அறிஞன்” என்றது குறிப்பிடத்தக்கது. இராமபிரான் கூற்றாகப் போற்றிக் கூறியது போதாதென்று கவிக் கூற்றாகவும் 'வெவ்வழி விலங்கி நன்னெறியை மேவினான்” என்றது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then, coming to himself, freed of his faintness, he said,
- "Go and bring the wise one of the right path"; and when they told him,
- "Come this way," he arrived —
- he who had turned from the cruel path and taken the good way.
What the poem says
Roused by Cukkirīvaṉ's words, Irāmaṉ recovers from his despondency and sends messengers to fetch Vīṭaṇaṉ, whom he calls "the wise one of the right path".
Vīṭaṇaṉ comes at once. The poet adds his own praise: Vīṭaṇaṉ is one who left the path of evil for the path of good. The commentary notes that the same lips that named Aṉumaṉ "the master of words" now honour Vīṭaṇaṉ.