கம்பராமாயணம் 6571 · யுத்த 5.13

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆயதோர் அளவையின் - (சீதையின் நினைவால் இராமன் வருந்திய) அத்தகைய நேரத்திலே; அருக்கன் மைந்தன் - சூரியகுமாரனான சுக்கிரீவன் (இராமபிரானை நோக்க); நீ தேய்வது என் - (பெருமானே) நீ இவ்வாறு வருந்தித் தேய்வது என்ன பயனைக் கருதி; காரியம் நிரப்பும் சிந்தையை - செய்யவேண்டிய காரியங்களை எண்ணி நிறைவேற்றத் தக்க சிறந்த மனத்தை உடையவன் நீ (ஆதலின்); மேயவன் தன்னொடும் எண்ணி - நம்மை நாடி வந்துள்ள இலங்கை வேந்தனான வீடணனுடன் கலந்து சிந்தித்து; மேல் இனித் தூயது நினைக்கிலை - இனிமேல் நடக்க வேண்டிய நமக்கு நன்மைதரும் செயல்களை நினைக்காமலிருக்கிறாயே; என்னச் சொல்லினான் - என்று இராமபிரானிடம் கூறலானான்.

இராவணனைவென்று, சீதாபிராட்டியை மீட்கும் செயலை "தூயது” என்றான். இராமபிரான், செயற்கரியன செய்து முடிக்கும் மன வலிமை உடையவன் என்பதை "காரியம் நிரப்பும் சிந்தையை" என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment the son of the Sun said: "Why do you waste away?
  2. You have a mind able to carry any task through;
  3. why do you not consult with the one who has come to us
  4. and think now of the right course ahead?" So he spoke.

What the poem says

Cukkirīvaṉ, seeing Irāmaṉ consumed by grief, gently rebukes him. Wasting away achieves nothing.

Irāmaṉ is someone who accomplishes whatever he sets his mind to. He should consult Vīṭaṇaṉ, who has just joined them, and plan the next step: defeating Irāvaṇaṉ and rescuing Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyatu ōr aḷavaiyiṉ arukkaṉ maintaṉ 'nī
tēyvatu eṉ? kāriyam nirappum cintaiyai;
mēyavaṉtaṉṉoṭum eṇṇi mēl iṉit
tūyatu niṉaikkilai' eṉṉac colliṉāṉ.