கம்பராமாயணம் 6570 · யுத்த 5.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பணி பழுத்து அமைந்த பூண் - வேலைப்பாடு நிரம்பிப் பொருந்திய அணிகலன்களை அணிந்துள்ள; அல்குல் பண்பினால் - அல்குலையுடைய சீதா பிராட்டியின் சிறந்த பண்புகளை நினைத்துப் பார்ப்பதால்; பிணி பழுத்து அமைந்ததோர் - காமநோய் முதிர்ந்து அமைந்தமையால் உண்டானதொரு, பித்தின் உள்ளத்தான் - பித்துப் பிடித்தது போன்ற மனத்தை உடைய இராமபிரான்; அணி பழுத்து அமைந்த - அழகு பழுத்து அமைந்ததாகிய; முத்து அரும்பு செம்மணி - முத்துக்கள் அரும்பிய சிவந்த மணி போன்ற; மணி பழுத்து அமைந்த வாய் - அழகு நிறைந்து விளங்கும் சீதாபிராட்டியின் திருவாயினை; மறக்க வல்லனோ - மறக்கும் வல்லமை உடையவனோ? வல்லன்.
சீதாபிராட்டியின் சிறந்த குண நலங்களை எப்போதும் நினைத்திருப்பதால் காம நோய் முதிர்ந்து பித்துப் பிடித்தது போன்ற மனத்தை உடைய இராமபிரான் முத்தரும்பிய செம்மணி போன்ற அழகிய சீதா பிராட்டியின் வாயை மறக்கவல்லனல்லன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He whose mind had become a kind of madness, the sickness of love ripened in it,
- through dwelling on the charms of her whose hips wore ornaments of ripened craftsmanship —
- could he forget her mouth, ripe with beauty, a ruby
- budding with pearls, ripe with loveliness?
What the poem says
The verse repeats the word "ripened" four times. Irāmaṉ's love-sickness has ripened into something like madness as he dwells on Cītai's beauty.
Above all he cannot forget her mouth, red as a ruby with teeth like pearls set within it. The verse portrays the depth of his longing in the conventions of Tamil love poetry.