கம்பராமாயணம் 6569 · யுத்த 5.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உடலினை நோக்கும் - (அப்போது இராமபிரான்) சீதையின் பிரிவால் மெலிந்து போன தனது உடலைப் பார்த்தான்; இன் உயிரை நோக்கும் - தனது இனிய உயிர் போன்றவளாகிய சீதாபிராட்டியை மனதால் நினைத்தான்; இடரினை நோக்கும் - அப்பிராட்டிக்கு நேர்ந்த துன்பத்தை நினைத்தான்; மற்று யாதும் நோக்கலன் - வேறெதுவும் எண்ணாதவனாயிருந்தான்; கடலினை நோக்கும் - தன்னெதிரே உள்ள கடலைப் பார்ப்பான்; அக்கள்வன் வைகுறும் - சீதையைக் கவர்ந்து சென்ற கள்வனாகிய இராவணன் தங்கியிருக்கும்; திடரினை நோக்கும் - இலங்கையாகிய திட்டைப் பார்க்கிறான்; தன் சிலையை நோக்கும் - தன் கையிலிருக்கும் வில்லையும் பார்த்துக் கொள்கிறான்.
இராமபிரான் உடல் என்றால் சீதாபிராட்டி உயிர்; எனவேதான் தன் உடலைப் பார்த்தவன் இனிய உயிரான பிராட்டியை நினைவு கூர்ந்தான்; பின் பிராட்டிக்கு நேர்ந்த துன்பத்தை எண்ணுகிறான். தனக்கும் - சீதைக்கும் இடையே பரந்து கிடக்கும் கடலைப் பார்க்கிறான். அக்கடல் நடுவே, சீதையைக் கவர்ந்து சென்ற கள்வனாகிய இராவணன் தங்கியிருக்கும் இலங்கை என்னும் ஒரு திட்டைப் பார்க்கிறான். இராவணனைக் கொன்று, சீதையைச் சிறை மீட்க உதவச் சித்தமாயுள்ள தனது வில்லைப் பார்க்கிறான். சீதையைப் பிரிந்து வருந்தும் இராமபிரானது நிலையைப் படிப்பவர் உள்ளத்தில் நன்கு பதியும் படி - எளிய சொற்களால் - உணர்ச்சிப் பெருக்கை வெளியிடும் பாடல் இது. 'மால்' இரண்டிடத்தும் அசை நிலை. இராமபிரானது கண்களுக்கு இலங்கை மாநகர் ஒரு சிறிய திடலாகத்தான் தோன்றியதாம். சிலை - வில்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He looks at his body; he looks to his sweet life;
- he looks at her suffering; he looks at nothing else;
- he looks at the sea; he looks at the mound where that thief
- is lodged; he looks at his own bow.
What the poem says
A famous verse of simple words and great feeling. Irāmaṉ's gaze moves from one thing to the next. He looks at his own wasted body, then thinks of Cītai, his "sweet life", for if he is the body she is its soul. He thinks of her suffering.
Then he looks at the sea that divides them, at Ilaṅkai, which to his eyes is only a small mound of earth where the thief lives, and finally at his bow, the means of rescuing her. The sequence moves from grief to resolve.