கம்பராமாயணம் 6568 · யுத்த 5.10

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கரத்தொடும் பாழிமாக் கடல் கடைந்துளான்
உரத்தொடும் கரனொடும் உருவ ஓங்கிய
மரத்தொடும் தொளைத்தவன் மார்பில் மன்மதன்
சரத்தொடும் பாய்ந்தன நிலவின் தாரைவாள்.

பொருள் · Meaning in Tamil

கரத்தொடும்பாழிமாக்கடல் கடைந்துளான் - தனது கைகளினாலே வன்மைமிக்க பெரிய பாற்கடலைக் கடைந்த வாலியினது; உரத்தொடும் கரனொடும் - மார்பையும், கரனையும்; உருவ ஓங்கிய மரத்தொடும் - உயர்ந்து வளர்ந்த வடிவத்தை உடைய ஏழுமரங்களையும், தொளைத்தவன் - ஊடுருவிச் செல்லுமாறு அம்புதைய்த்த இராமபிரானுடைய; மார்பில் - மார்பிலே (இன்று); மன்மதன் சரத்தொடும் - மன்மதனுடைய அம்புகளோடு; நிலவின்தாரை வாள் பாய்ந்தது - நிலவின் கதிர்களாகிய வாளும் பாய்ந்தது.

சீதையைப் பிரிந்து பிரிவாற்றாமையால் வருந்திய, இராமபிரானை மன்மதனும் மலரம்புகளால் துன்புறச் செய்தான். பிரிந்தார்க்குப் பகையான நிலவும் துன்புறுத்தியது என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Into the chest of him who pierced through the chest of the one who churned
  2. the mighty great sea with his own hands, and through Karaṉ,
  3. and through the trees that towered tall in form,
  4. the sword of the moon's rays plunged, along with the arrows of Maṉmataṉ.

What the poem says

The irony is pointed. Irāmaṉ's arrows pierced the chest of Vālī, so strong he once helped churn the Ocean of Milk with his own hands; they pierced the demon Karaṉ and the seven giant sal trees.

Yet now that same mighty archer is helpless, as the love-god's flower-arrows and the moonlight's sword-like rays strike his own heart in his longing for Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karattoṭum pāḻi māk kaṭal kaṭaintuḷāṉ
urattoṭum karaṉoṭum uruva ōṅkiya
marattoṭum toḷaittavaṉ mārpil maṉmataṉ
carattoṭum pāyntatu nilaviṉ tārai vāḷ.