கம்பராமாயணம் 6567 · யுத்த 5.9

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மன்றல் வாய் மல்லிகை எயிறு வண்டு இனம்
கன்றிய நிறத்தது நறவின் கண்ணது
குன்றின் வாய் முழையின் நின்று உலாய கொட்பது
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்துச் சென்றதால்.

பொருள் · Meaning in Tamil

மன்றல்வாய் மல்லிகை எயிற்றின் - மணம் பொருந்திய மல்லிகை அரும்புகளாகிய பற்களையும்; வண்டினம் கன்றிய நிறத்தது - வண்டினமாகிய கரிய கோடுகளை உடைய உடலையும்; நறவின் கண்ணது - தேனாகிய சிவந்த கண்களையும்; குன்றின் வாய் முழையின் நின்று - மலையிடத்தே உள்ள குகையிலிருந்து; உலாய கொட்பது - உலாவும் தன்மையுடையதுமாகிய; தென்றல் என்று ஒரு புலி - தென்றல் என்னும் ஒரு புலியானது; உயிர்த்துச் சென்றது - பெருமூச்சுவிட்டபடி வந்தது.

தென்றல் - புலி; மல்லிகை பல்; வண்டுகள் - புலியின் கருங்கோடுகள் - இது முற்றுருவகம். தென்றலின் வருகையைப் புலியின் வருகைக்கு உருவகித்துக் கூறியநயம் அறிந்து மகிழ்தற்குரியது. கன்றிய - கறுத்த. நறவு - தேன். முழை - குகை. கொட்பு - உழல்தல், திரிதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With fragrant jasmine buds for fangs, with swarms of bees
  2. for its dark-striped hide, with honey for its eyes,
  3. roaming out from a cave in the mouth of the hills,
  4. a tiger called the south wind came breathing hard.

What the poem says

The south breeze, which in Tamil love poetry torments separated lovers, is turned into a tiger stalking Irāmaṉ. Its fangs are the white jasmine buds, its stripes the dark bees, its eyes the red-gold honey, and it emerges from a mountain cave, as the south wind was thought to come from the Potiyil hills.

The commentary calls this a complete metaphor: every feature of the breeze is matched with a feature of the tiger.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṉṟalvāy mallikai eyiṟṟiṉ vaṇṭu iṉam
kaṉṟiya niṟattatu naṟaviṉ kaṇṇatu
kuṉṟiṉvāy muḻaiyiṉniṉṟu ulāya koṭpatu
teṉṟal eṉṟu oru puli uyirttuc ceṉṟatāl.